புது டெல்லி: கொரோனா வைரசின் இரண்டாவது அலை இந்தியாவை படுத்தி எடுத்து வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்க கொண்டிருக்கும் நிலையில், இறப்பு என்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருப்பது பீதியை கிளப்பியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள மொத்த கொரோனா பாதிப்பு (Coronavirus) எண்ணிக்கை 141 மில்லியனுக்கும் அதிகமாகவும், இறப்பு எண்ணிக்கை 3 மில்லியனுக்கும் அதிகமாகவும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக, தினமும் இரண்டு லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசிகள் கேட்டும், படுக்கைகள் கேட்டும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு (Rahul Gandhi) கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், லேசான கொரோனா அறிகுறி இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்திருக்கிறது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ | முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோன தொற்று உறுதியாகியுள்ளது.
After experiencing mild symptoms, I’ve just tested positive for COVID.
All those who’ve been in contact with me recently, please follow all safety protocols and stay safe.
— Rahul Gandhi (@RahulGandhi) April 20, 2021
மேற்குவங்க தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி ரத்து செய்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. முன்னதாக நேற்று இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு (Manmohan Singh) கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து திங்கட்கிழமை மாலையில் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது ராகுல் காந்திக்கும் கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR