கோபத்துடன் EVM பொத்தானை அழுத்துங்கள் - அமித்ஷா

டெல்லியை உலகத் தரம் வாய்ந்த நகரமாக பாஜக செய்யாவிட்டால் வாருங்கள் என் காதுகளை இழுக்கவும் மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்!!

Last Updated : Jan 27, 2020, 02:56 PM IST
கோபத்துடன் EVM பொத்தானை அழுத்துங்கள் - அமித்ஷா title=

டெல்லியை உலகத் தரம் வாய்ந்த நகரமாக பாஜக செய்யாவிட்டால் வாருங்கள் என் காதுகளை இழுக்கவும் மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்!!

யூனியன் பிரதேசமான தலைநகர் டெல்லியில் அடுத்த மாதம் 8 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆளும் ஆம் ஆத்மி - பாஜக - காங்கிரஸ் என்று மும்முனைப் போட்டி இந்த முறை நிலவுகிறது. ஆட்சியைப் பிடிக்க பாஜக கடும் முயற்சி எடுத்து வருகிறது. மக்களவைத் தேர்தல் மற்றும் டெல்லி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றதால், இம்முறையும் அதே வெற்றி கிடைக்கும் என்று அக்கட்சி கணக்கு போட்டுள்ளது.

ஆளும் ஆம் ஆத்மி தனது 5 ஆண்டுகால ஆட்சியின் செயல்பாடுகளை முன்வைத்து தேர்தலை சந்திக்கிறது. தேர்தல் களத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி உள்ளது. வடகிழக்கு டெல்லியின் பாபர்பூர் பகுதியில் நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “15 ஆண்டுகள் டெல்லியை காங்கிரஸ் ஆண்டது. 5 ஆண்டுகள் ஆம் ஆத்மி ஆண்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டெல்லியை உலகத் தரமிக்க நகரமாக மாற்றுவோம். இது நடக்கவில்லை என்றால் நீங்கள் வந்து என் காதைப் பிடித்து கேட்கலாம்” என்று ஆவேசமாக பேசினார்.

மேலும், பொய் சொல்வதற்கு ஒரு ஆய்வை வைத்துக்கொண்டால் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு முதலிடம் பிடிக்கும் என்றும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார். சிசிடிவி கேமரா பொருத்துதல், சாலைகள் மேம்பாடு, இலவச வசதி, கல்வி, குடிநீர் என்று அனைத்திலும் ஆம் ஆத்மி அரசு தோல்வியடைந்துள்ளதாகவும் அமித்ஷா கூறினார்.

இதை தொடர்ந்து, "பிப்ரவரி 8 ஆம் தேதி நீங்கள் (ஈவிஎம்) பொத்தானை அழுத்தும்போது, அதன் தற்போதைய (வாக்கெடுப்பு முடிவு) ஷாஹீன் பாக் மீது உணரப்படும் கோபத்துடன் அவ்வாறு செய்யுங்கள்" என்று பாஜக தலைவர் கூறினார். 

 

Trending News