Wrestlers Protest: பிரிஜ் பூஷனுக்கு எதிரான எஃப்.ஐ.ஆரில், மார்பகத்தை பிடித்தது, பின்தொடர்தல் போன்ற கடுமையான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்துகிறது. பிரிஜ் பூஷனை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என்று மல்யுத்த வீரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பிரிஜ் பூஷன் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் அளவுக்கு மீறிய நிலையில், இதற்கு மேல் என்ன ஆனாலும் பரவாயில்லை என்ற நிலையில் வெடித்திருக்கிறது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையில், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியுள்ளது. விளையாட்டு வீராங்கனைகளின் மூச்சைப் பரிசோதிக்கும் சாக்கில் தகாத முறையில் தொட்டு சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளர் பிரிஜ் பூஷன் சரண் சிங்.
விளையாட்டில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சைக்கான செலவை, மல்யுத்த கூட்டமைப்பில் இருந்து தருவதற்கு ஈடாக, பாலியல் ரீதியாக தன்னிடம் நெருக்கமாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று பிரிஜ் பூஷன் தங்களை மிரட்டியதாக, மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எஃப்ஐஆர்களில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள்
மல்யுத்த வீராங்கனைகளை தேவையில்லாமல் தொடுவது, பெண்களின் கால்களை தனது கால்களால் நெருடுவது, மைனர் வீராங்கனை ஒருவரின் மார்பகத்தில் கைகளால் வருடியது, மற்றும் அந்தப் பெண்ணை பின்தொடர்வது உள்ளிட்ட பல பாலியல் துன்புறுத்தல்களில் பிரிஜ் பூஷன் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஏழு பெண் மல்யுத்த வீரர்களின் புகார்களின் அடிப்படையில் கடந்த மாதம் டெல்லியின் கனாட் பிளேஸ் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்களில் குற்றச்சாட்டுகள் உள்ளன.
பிரிஜ் பூஷனை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என்று மல்யுத்த வீரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மறுபுறம், பிரிஜ் பூஷன் சரண் சிங் ஆதாரம் கோரும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த சிங், “உங்களிடம் ஏதேனும் ஆதாரம் இருந்தால், அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும், எந்த தண்டனையையும் ஏற்க நான் தயாராக இருக்கிறேன்,” என்று அவர் சவால் விடுகிறார்.
மேலும் படிக்க | சாகும் வரை உண்ணாவிரதம்! கங்கை நதியில் பதக்கங்களை போட மல்யுத்த வீரர்கள் முடிவு
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (WFI) தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங், தன் மீதான குற்றச்சாட்டுக்களில் ஒன்று நிரூபிக்கப்பட்டாலும், தூக்கில் தொங்கிவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் எம்பியான பிரிஜ் பூஷண் சரண் சிங், மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் தனது குழந்தைகளைப் போன்றவர்கள் என்றும், அவர்களின் ரத்தமும் வியர்வையும் நாட்டிற்கு பெருமை சேர்த்திருப்பதால் அவர்களைக் குறை கூற மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இப்படி, மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரின் செயலால் நாடே அவமானப்படுவதாக பல தரப்பினரும் அதிருப்தி அடைந்திருக்கும் நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாரதிய ஜனதா கட்சியின் எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களுக்கு நீதி வழங்குவதில் மத்திய அரசு ஏன் பிடிவாதமாக இருக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டில் இரண்டு எஃப்ஐஆர்களை போலீசார் பதிவு செய்துள்ள நிலையில், ஏன் நடவடிக்கை எடுக்க அரசு தயங்குகிறது என்ற கேள்விகள் உரக்கக் கேட்கப்படுகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் இருந்து பெண்களுக்கான மரியாதை குறித்து நீண்ட சொற்பொழிவுகளை நிகழ்த்துகிறார், ஆனால் பெண்களை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாப்பது ஏன் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்புகிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ