சத்தீஸ்கர் தேர்தல் களத்தில் இன்று பிரதமர் மோடி vs ராகுல் பிரச்சாரம்

சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் முடிவு. இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்க்கொள்ளும் பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்தி.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 9, 2018, 11:50 AM IST
சத்தீஸ்கர் தேர்தல் களத்தில் இன்று பிரதமர் மோடி vs ராகுல் பிரச்சாரம் title=

சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குபதிவு வரும் நவம்பர் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் பலத்தை தேர்தல் பிரசாரத்தில் காட்டி வருகின்றனர். இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி நக்சல் பாதிக்கப்பட்ட  பஸ்தார் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்க்கொள்கிறார். அதே நேரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இரண்டு நாட்கள் ஐந்து  இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்க்கொள்கிறார்.

பிரதமர் மோடி:

சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முதல் முறையாக பிரதமர் பிரச்சாரம் செய்வதற்காக, காலை 11.20 மணிக்கு ராய்பூர் விமான நிலையத்திற்கு வந்தார். இங்கிருந்து தனி விமானம் மூலம் ஜக்தல்பூருக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரம் செய்வார். பின்னர் 3.25 மணிக்கு ராய்பூர் வருவார். அங்கிருந்து 3.30 மணிக்கு டெல்லி செல்கிறார். 

ராகுல்காந்தி:

அதேபோல, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை சத்தீஸ்கரில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்கிறார். ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை (இன்று) 11 மணியளவில் ராய்ப்பூருக்கு வருவார் என்று மாநிலத்தில் உள்ள மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். அங்கிருந்து கங்கர் மாவட்டத்தில் பங்கன் ஜோருக்கு புறப்படுவார். 12.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணி வரையில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவார். பின்னர், அவர் ராஜ்நாந்த் காவ்ன் மாவட்டத்தில் கைர்கருக்கு புறப்பட்டு செல்வார். அங்கு 2.00 மணியிலிருந்து 3.00 மணி வரை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்வார். பின்னர் மாலை 5 மணியில் இருந்து 6.30 மணி வரை சாலையோர பிரச்சாரம் மேற்கொள்வார்.

அடுத்த நாள் நவம்பர் 10 ஆம் தேதி கங்கர் மாவட்டத்தில் உள்ள சர்மா பகுதியில் மதியம் 12.00 மணியிலிருந்து 1.00 மணி வரை பிரச்சாரம், அங்கிருந்து கொன்டாகாவ்வுக்கு செல்வார். அங்கு மதியம் 2.15 மணி முதல் 3 மணி வரை தேர்தல் பிரச்சாரம். பின்னர் ராகுல்காந்தி ஜக்தல்பூருக்கு செல்வார். அங்கு 3.45 மணி முதல் மாலை 4.45 வரை காங்கிரஸ் கட்சித் கூட்டத்த்தில் கலந்துக்கொள்வார். பின்னர் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்வார். 

சத்தீஸ்கர் சட்டமன்றம்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. அதில் இருகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் வரும் நவம்பர் 12 ஆம் நாள் மற்றும் வரும் 20 ஆம் நாள் ஆகிய தினங்களில் வாக்குபதிவு நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக வரும் நவம்பர் 12 ஆம் நாள் 18 தொகுதிகளுக்கு வாக்குபதிவு நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான பிரசாரம் வரும் நாளை(சனிக்கிழமை) மாலையுடன் நிறைவடைகிறது.

Trending News