சந்திரயான்-3 சமீபத்திய புதுப்பிப்பு: நிலவை நோக்கிய இந்தியாவின் பயணம் இன்னும் சில மணி நேரங்களில் நிறைவடையவுள்ளது. இந்தியா அடையவுள்ள வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்காக, அந்த தருணத்திற்காக உலகமே ஆவலுடன் காத்திருக்கின்றது. அதன்படி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதன் மூன்றாவது நிலவு பயணமான சந்திரயான் 3 நாளை (ஆகஸ்ட் 23, 2023), மாலை 6:04 மணி நிலவில் தரையிறங்குகிறது.
ஆகஸ்ட் 23, 2023, புதன் கிழமை சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) அறிவித்துள்ளது. "சந்திரயான்-3 இன் மென்மையான தரையிறக்கம் இந்திய வரலாற்றில் ஒரு அற்புதமான தருணமாக இருக்கும். இது அனைவரிடமும் ஆர்வத்தைத் தூண்டுவது மட்டுமல்லாமல், நமது இளைஞர்களின் மனதில் விண்வெளி ஆய்வுக்கான ஆர்வத்தையும் ஏற்படுத்தும் வகையில் உள்ளது" என்று இஸ்ரோ தனது முந்தைய பதிவில் தெரிவித்து இருந்தது.
மேலும் படிக்க | சந்திரயான் 3: எல்லாம் தோல்வியடைந்தாலும் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் - எப்படி?
இந்நிலையில் சந்திரயான் 3 நிலவு தரையிறக்கம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், சமூக ஊடகங்கள், யூடியூப் மற்றும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. இதனை, தேசிய விண்வெளி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே இந்த சந்திரயான்-3 இன் மென்மையான தரையிறக்கம் இந்திய வரலாற்றில் ஒரு அற்புதமான தருணத்தை வீட்டில் இருந்த படி எங்கு எப்படி பார்ப்பது என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்.
சந்திரயான் 3 நிலவு தரையிறக்கம் காட்சியை எப்போது பார்ப்பது
இஸ்ரோ ஆகஸ்ட் 20 அன்று தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' தளம் (முன்னர் ட்விட்டர்) மூலம், சந்திரயான் -3 இன் விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23 புதன்கிழமை மாலை 6:04 மணிக்கு சந்திரனைத் தொடும் என்று பதிவிட்டு இருந்தது.
Chandrayaan-3 Mission:
Chandrayaan-3 is set to land on the moon on August 23, 2023, around 18:04 Hrs. IST.
Thanks for the wishes and positivity!
Let’s continue experiencing the journey together
as the action unfolds LIVE at:
ISRO Website https://t.co/osrHMk7MZL
YouTube… pic.twitter.com/zyu1sdVpoE— ISRO (@isro) August 20, 2023
இந்த வரலாற்று நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு ஆகஸ்ட் 23, 2023 அன்று மாலை 5:27 மணிக்குத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சந்திரயான் 3 நிலவு தரையிறக்கம் காட்சியை எங்கே பார்ப்பது
இஸ்ரோ இணையதளம், இஸ்ரோவின் யூடியூப் சேனல், இஸ்ரோவின் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் டிடி நேஷனல் டிவி சேனல் மற்றும் நேஷனல் ஜியோகிராஃபிக் டிவி சேனல் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பார்வையாளர்கள் சாஃப்ட் லேண்டிங்கை நேரடியாகப் பார்க்கலாம். டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்திலும் ஆன்லைன் லைவ் ஸ்ட்ரீமிங் நடைபெறும். சந்திரயான்-3 லைவ் அப்டேட்களில் சமீபத்திய புதுப்பிப்புகளை இங்கே நீங்கள் பார்க்கலாம்.
"சந்திரயான் - 3 #countdowntohistory" இன் நேரடி ஒளிபரப்பு நேஷனல் ஜியோகிராஃபிக் சேனல் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இயங்குதளங்களில் ஆகஸ்ட் 23, 2023 அன்று மாலை 4 மணி முதல் தொடங்கும். கௌரவ் கபூர் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் முக்கிய விண்வெளி நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.
இஸ்ரோ நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே தீவிரமாக ஊக்குவிக்கவும், சந்திரயான்-3 சாஃப்ட் லேண்டிங்கின் நேரடி ஒளிபரப்பை தங்கள் வளாகங்களுக்குள் ஏற்பாடு செய்யவும் ஊக்குவித்துள்ளது.
சந்திரயான் - 3 இன் பயணம் ஒரு மாதம் மற்றும் ஆறு நாட்களுக்கு முன்பு ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜூலை 14 அன்று ஏவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | சந்திரயான்-3: விக்ரம் லேண்டர் அனுப்பிய புகைப்படங்களை பெருமையுடன் பகிர்ந்த இஸ்ரோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ