#CauveryIssue: மத்திய அரசின் மனு விசாரணைக்கு ஏற்பு

காவிரி தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் அவசாகம் கோரிய மத்திய அரசின் மனு விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்! 

Last Updated : Apr 3, 2018, 11:44 AM IST
#CauveryIssue: மத்திய அரசின் மனு விசாரணைக்கு ஏற்பு title=

மத்திய அரசை கண்டித்து 32 மாவட்ட தலைநகரங்களில் இன்று அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம்! 

காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது. இதையடுத்து, மத்திய அரசானது இந்த காவிரி விவகாரம் தொடர்பாக மேலும் மூன்று மாதம் கால அவகாசம் கேட்டிருந்தது. இதை தொடர்ந்து, வருகின்ற 9-ம் தேதி தமிழக அரசின் மனுவை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட தலைநகரங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது. புதுச்சேரி, காரைக்காலிலும் இதே போராட்டம் தொடர்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும், அதை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம்தாழ்த்தி வருகிறது. மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் உண்ண விரதம் நடை பெற்று வருகிறது.

இந்நிலையில், தற்போது மத்திய அரசின் 3 மாத கால அவகாச மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றது. இந்த மனுவை தமிழகம் தாக்கல் செய்த மனுவான நீதிமன்ற அவமதிப்பு மனுவுடன் சேர்த்து வருகின்ற 9-ம் தேதி விசாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

Trending News