பஞ்சாப் முதல்-மந்திரியாக அமரிந்தர் சிங் இன்று பதவியேற்றார்.
சண்டிகாரில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று காலை பஞ்சாப்பின் 26-வது முதல்வராக அம்ரிந்தர் சிங் பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் வி.பி.சிங் பத்னோரே பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
பஞ்சாப் முதல்-மந்திரியாக அமரிந்தர் சிங் பதவி ஏற்பது இது 2-வது முறையாகும். ஏற்கனவே அவர் 2002-2007 காலகட்டத்தில் அங்கு முதல்-மந்திரி பதவி வகித்தார்.
#FLASH Congress' Captain Amarinder Singh sworn in as CM of Punjab pic.twitter.com/Gi9tnyZEsu
— ANI (@ANI_news) March 16, 2017
இவ்விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Swearing in ceremony of Captain Amarinder Singh begins, Congress VP Rahul Gandhi & former PM Manmohan Singh also present pic.twitter.com/uDmrzDk6C7
— ANI (@ANI_news) March 16, 2017
பஞ்சாப் முதல்வராக அம்ரிந்தர் சிங் பதவியேற்றவுடன், அவரது அமைச்சரவை பதவி ஏற்றனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து அமைச்சர்களாக பதவியேற்றனர்.
#FLASH Navjot Singh Sidhu sworn in as a cabinet minister of Punjab govt pic.twitter.com/TMYNhR5cH0
— ANI (@ANI_news) March 16, 2017
இந்த நிலையில், கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
பிதமர் மோடி கூறியதாவது:-
பஞ்சாப் முதல்வராக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கு வாழ்த்துக்கள். பஞ்சாப் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக நீங்கள் சிறப்பாக உழைக்க வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.
Congratulations @capt_amarinder on taking oath as CM. Wishing you the very best in working for Punjab’s development.
— Narendra Modi (@narendramodi) March 16, 2017
காங்கிரஸ் 117 உறுப்பினர் கொண்ட பஞ்சாப் சட்டசபையில் 77 இடங்களை கைப்பற்றியது.