நியூடெல்லி: திருத்தப்பட்ட உள்நாட்டு எரிவாயு விலை வழிகாட்டுதல்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இயற்கை எரிவாயுவின் விலை இந்திய கச்சா எண்ணெயின் மாதாந்திர சராசரியில் 10% ஆக இருக்கும், இந்த விலை மாதந்தோறும் அறிவிக்கப்படும். புதிய வழிகாட்டுதல்களின்படி உள்நாட்டு நுகர்வோருக்கு கேஸ் விலை நிலையானதாக இருக்கும் என்பதோடு, உற்பத்தியாளர்களுக்கு சந்தை ஏற்ற இறக்கங்களில் இருந்து பாதுகாப்பும் கிடைக்கும்.
எல்பிஜி எரிவாயுவின் நிலையான விலையை உறுதிசெய்யவும், பாதகமான சந்தை ஏற்ற இறக்கங்களிலிருந்து உற்பத்தியாளர்களுக்குப் போதுமான பாதுகாப்பை வழங்கவும் நடவடிக்கை எடுக்கவும் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது..
செலவினங்களை நிலைநிறுத்துவதற்கான திருத்தப்பட்ட உள்நாட்டு எரிவாயு விலை வழிகாட்டுதல்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
Union Cabinet approves revised domestic gas pricing guidelines
price of natural gas to be 10% of the monthly average of Indian Crude Basket, to be notified monthly
Move to ensure stable pricing in the regime and provide adequate protection to producers from adverse market… pic.twitter.com/zEQpEpqbcx
— ANI (@ANI) April 6, 2023
திருத்தப்பட்ட உள்நாட்டு எரிவாயு விலை நிர்ணய வழிகாட்டுதல்கள் உள்நாட்டு எரிவாயு நுகர்வோருக்கு நிலையான விலை நிர்ணயத்தை உறுதி செய்யும் என்றும் விலையை கட்டுக்குள் வைத்திருக்கும் என்றும் மத்திய அரசு கூறுகிறது.
ஏப்ரல் ஆறாம் தேதியன்று, திருத்தப்பட்ட உள்நாட்டு எரிவாயு விலை சூத்திரத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். அமைச்சரின் கூற்றுப்படி, இயற்கை எரிவாயுவின் விலை யானது, இந்திய கச்சா எண்ணெய் விலையின் மாதாந்திர சராசரியில் 10% ஆக இருக்கும்.
திருத்தப்பட்ட விலை நிர்ணய வழிகாட்டுதல்கள், உள்நாட்டு எரிவாயு நுகர்வோருக்கு நிலையான விலை நிர்ணயத்தை உறுதி செய்யும் என்றும், பாதகமான சந்தை ஏற்ற இறக்கங்களில் இருந்து உற்பத்தியாளர்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்கும் என்றும், உற்பத்தியை அதிகரிக்க ஊக்குவிப்பதாகவும் பாஜக தலைமையிலான மத்திய அரசு கூறுகிறது.
புதிய வழிகாட்டுதல்கள் சிஎன்ஜி மற்றும் குழாய் சமையல் எரிவாயுவின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க ஒரு உச்ச வரம்பை நிர்ணயிக்கும். APM ((நிர்வகிக்கப்பட்ட விலை பொறிமுறை) எரிவாயுவுக்கான $4/MMBtu விலை மற்றும் $6.5/MMBtu என்ற உச்சவரம்புக்கு தற்போதைய $8.57க்கு எதிராக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கான அறிவிப்பு ஏப்ரல் 7ஆம் தேதி வெளியிடப்பட்டு, திருத்தப்படும். வழிகாட்டுதல்கள் ஏப்ரல் 8 முதல் நடைமுறைக்கு வரும்.புதிய வழிகாட்டுதல்கள் ONGC (எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்), புதிய ஆய்வு உரிமக் கொள்கை (NELP) தொகுதிகள் மற்றும் NELP-க்கு முந்தைய தொகுதிகள் ஆகியவற்றிலிருந்து உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவிற்குப் பொருந்தும்.
நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எரிவாயுக்கான விலை சூத்திரத்தை மறுஆய்வு செய்யும் நோக்கில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கிரிட் பரிக் குழு கடந்த நவம்பரில் தனது அறிக்கையை சமர்ப்பித்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ஜனவரி 1, 2027 க்குள் இயற்கை எரிவாயு விலையை முழுமையாக தாராளமயமாக்கவும், மரபு மற்றும் பழைய வயல்களில் இருந்து எரிவாயு விலைக்கு ஒரு தளம் மற்றும் உச்ச வரம்பை அமைக்கவும் குழு பரிந்துரைத்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ