Budget 2024: இந்தியாவில் இந்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால் இன்று தாக்கல் செய்யப்படும் 2024-25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கான திட்டங்களில் அதிக அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் 55 சதவீதத்திற்கு மேல் விவசாயம் முதன்மையான வருமான ஆதாரமாக உள்ளது. மேலும் விவசாயிகள் வாக்கு வாக்குகளும் தேர்தல் முடிவில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தும். விவசாயத்துறை இந்தியாவின் பொருளாதார ஏற்ற இறக்கம் மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையில், நரேந்திர மோடியின் மத்திய அரசு விவசாயத் துறையில் தொடர்ந்து பல்வேறு வேலைகளை செய்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளது. 2005 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் வளர்ச்சி சதவீதம் 3.4 இருந்த நிலையில், 2015 முதல் 2023 நிதியாண்டில் அவை 3.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2023 நிதியாண்டின் போது, பண்ணை துறை வளர்ச்சி 4 சதவிகிதம் வளர்ந்தது. இருப்பினும், இந்த ஆண்டில், பண்ணை துறையின் வளர்ச்சி கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 1.8 சதவிகிதமாக குறையக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள அதிக விளைச்சலை தரும் முக்கிய விவசாய பகுதிகளில் நிலவி வரும் வறண்ட காலநிலை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக 2024ல் வளர்ச்சி விகிதம் குறையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், விவசாயிகளுக்கு வருமானத்தை அதிகப்படுத்த, இடைக்கால பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளுக்கு அதிக ஒதுக்கீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. 2019 தேர்தலுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் மத்திய அரசு PM Kisan திட்டத்தை அறிவித்தது. இத்திட்டம் மூலம், நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 மூன்று தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு ரூ.2.8 லட்சம் பணம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த இடைக்கால பட்ஜெட்டில் PM-KISAN தவணை தொகையை அரசு அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது கொடுக்கப்பட்டு வரும் ரூ.6,000 தொகை, இந்த ஆண்டில் இருந்து ரூ.9,000 ஆக உயர்த்தப்படலாம். மேலும் பெண் வாக்காளர்களை கவரும் வகையில், பெண் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி தொகை, ரூ. 6,000-லிருந்து ரூ.12,000 வழங்க அரசு பரிசீலித்து வருகிறது. இந்தியாவில் உள்ள விவசாயிகளில் 60 சதவிகிதம் பெண்கள் இருந்தாலும், 13 சதவிகிதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே சொந்தமாக அவர்களது பெயரில் நிலத்தை வைத்துள்ளனர். பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த, PM-KISAN திட்டத்தின் கீழ் பெண் விவசாயிகளுக்கான உதவி தொகையை அரசு அதிகரிக்க உள்ளது.
2023-24ஆம் நிதியாண்டில் விவசாயக் கடன் இலக்கு ரூபாய் 20 லட்சம் கோடியாக இருந்தது. இந்த 2024 இடைக்கால பட்ஜெட்டில், விவசாயக் கடன் இலக்கை குறைந்தபட்சம் ரூ.25 லட்சம் கோடியாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. மேலும் தகுதியுள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் கடன் எளிதாக கிடைப்பதை அரசு உறுதி செய்யவும் புதிய திட்டங்களை கொண்டுவர வாய்ப்புள்ளது. 2023 டிசம்பர் வரை விவசாயக் கடன் இலக்கான ரூ.20 லட்சம் கோடியில் சுமார் 82 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
மேலும் படிக்க | இன்றே கடைசி நாள்.. FASTagல் அதிரடி மாற்றம், உடனே படிக்கவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ