கேரளாவில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலை13 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் 20 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றன!!
திருவனந்தபுரம்: கேரளாவில் சுத்தீகரிக்கபட்ட பாட்டில் குடிநீரின் விலை லிட்டருக்கு ரூ .13-க்கு விற்கப்படும் எனவும், அதன் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் தொகுக்கப்பட்ட தண்ணீரின் விலையை நிர்ணயிக்கவும் அரசி திட்டமிட்டுள்ளது. ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீருக்கு தற்போது ரூ .20 செலவிடும் நிலையில், அம்மாநில அரசு பாட்டில் குடிநீரின் விலை லிட்டருக்கு ரூ .13-க்கு விற்க வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
தாகத்தை தணிக்க பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குடிநீரின் விலை லிட்டருக்கு ரூ.20- என விற்கப்பட்டு வருகிறது. பேருந்து நிலையம், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் 30 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. இந்நிலையில், குடிநீர் பாட்டிலின் விலையை அதிரடியாக குறைத்து கேரள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் குடிநீர் பாட்டிலை சேர்த்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலை ரூ.13-க்கு விற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கு அந்த மாநில மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.