மோடியை இழிவுபடுத்தினாரா சித்து? தேர்தல் ஆணையம் கேள்வி!

பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக பாஜக கூறிய குற்றச்சாட்டை அடுத்து, சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Last Updated : May 11, 2019, 04:05 PM IST
மோடியை இழிவுபடுத்தினாரா சித்து? தேர்தல் ஆணையம் கேள்வி! title=

பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக பாஜக கூறிய குற்றச்சாட்டை அடுத்து, சித்துவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நாளை (மே 12-ஆம் தேதி), 6-ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல், இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் பஞ்சாப் மாநில அமைச்சரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான நவ்ஜோத் சிங் சித்து, சமீபத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். 

தனது பிரச்சார உரையின் போது "ரபேல் ஒப்பந்தத்தின் மூலம் பிரதமர் மோடி பணம் பெற்றதாகவும், தேசிய வங்கிகளில் கொள்ளையடித்த பெரும் பணக்காரர்களை நாட்டைவிட்டு தப்பி ஓட அனுமதித்துவிட்டதாகவும்" கடுமையாக விமர்சித்தார்.

சித்துவின் இந்த பேச்சு, பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருப்பதாக பாஜக சார்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

பாஜக-வின் இந்த புகாரில் முகாந்திரம் இருப்பதாக கருதிய தேர்தல் ஆணையம், சித்துவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு நாளில் பதிலளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே, பீகாரில் முஸ்லீம் மக்களிடையே சித்து பேசிய பேச்சுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்ததோடு, 72 மணி நேரம் பிரச்சாரம் மேற்கொள்ளவும் தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News