பாஜகவின் புதிய தேசியத் தலைவர் ஜனவரி 20ம் தேதி தேர்ந்தெடுக்கப்படுவார்

பாஜகவின் புதிய தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா தேர்ந்தெடுப்பது என கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதிகாரபூர்வ அறிவிப்பு ஜனவரி 20 ஆம் தேதி வெளியாகும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 17, 2020, 08:48 PM IST
பாஜகவின் புதிய தேசியத் தலைவர் ஜனவரி 20ம் தேதி தேர்ந்தெடுக்கப்படுவார் title=

புதுடெல்லி: பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார்? என்ற அறிவிப்பு வரும் ஜனவரி 20 ஆம் தேதி வெளியிடப்படலாம். இது தொடர்பாக ஜனவரி 19 ஆம் தேதி நியமனம் செய்யப்படும். கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஜே.பி.நட்டா தான் அடுத்த தேசிய தலைவராக இருக்கலாம் என முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதாவது, ஜனவரி 20 ம் தேதி புதிய பாஜக தலைவராக ஜே.பி.நட்டா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் செயல்முறை பாஜகவில் நடந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

கட்சி விதியின் படி, 50 சதவீதத்திற்கும் அதிகமான மாநிலங்களில் பாஜக தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பாஜக சார்பில் மாநிலங்களில் தேர்தல் ஏற்பாடு நடைபெறுகிறது. 

நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, டிசம்பர் 15 முதல் ஜனவரி 14 வரை நல்ல நேரம் இல்லாததால், பெரும்பாலான மாநிலங்கள் ஜனவரி 15 க்குப் பிறகு மாநில தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தலாம் என மத்திய தலைமையை கோரியிருந்தன. இத்தகைய சூழ்நிலையில், ஜனவரி 16, 17 மற்றும் 18 க்குள், 50 சதவீதம் மட்டுமல்ல, 80 சதவீத மாநிலங்களும் தேர்தல் நடைபெறும்.

எனவே, கட்சி வட்டாரங்களின்படி, ஜனவரி 19 ஆம் தேதி தேசிய தலைவர் பதவிக்கு வேட்புமனுக்கள் பெறப்படும். இதற்காக, தேசிய தேர்தல் அதிகாரியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராதா மோகன் சிங் வேட்புமனுக்கான நேரத்தை தீர்மானிப்பார். ஒரே ஒரு நியமனமாக இருந்தாலும் தேர்தல் செயல்முறை பின்பற்றப்படும். அதாவது, கட்சி விதிகள் படி அனைத்து செயல்களும் நடைபெறும். அடுத்த நாளில், அதாவது ஜனவரி 20 புதிய தலைவர் தேர்தலை ராதா மோகன் சிங் அறிவிப்பார்.

பாஜகவின் புதிய தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கும் தேர்தலின் போது, ​​முதலமைச்சர், துணை முதல்வர், மாநிலத் தலைவர் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் மூத்த தலைவர்கள் உட்பட பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்றும் நம்பப்படுகிறது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News