தெலங்கானவின் நிசாமாபாத் தொகுதியின் பாஜக எம்பி அரவிந்த் தருமபுரி அம்மாநில ஆளும் காங்கிரஸ் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை அண்மையில் சந்தித்தார். அப்போது அவர் தன்னுடைய தந்தையின் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். அதனை ஏற்றுக் கொண்ட ரேவந்த் ரெட்டி, அரவிந்த் தந்தையின் மறைவுக்கு தன்னுடைய இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்தார். மேலும், இரங்கல் கூட்டத்தில் கலந்து கொள்வதாகவும் வாக்குறுதி அளித்தார். இருப்பினும் இந்த சந்திப்பு அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால் அரவிந்த் தருமபுரியின் குடும்பம் பாரம்பரிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குடும்பம் ஆகும். அவருடைய தந்தை தர்மபுரி ஸ்ரீநிவாஸ், ஒருங்கிணைந்த ஆந்திராவின் காங்கிரஸ் தலைவராக இருந்தவர்.
மேலும் படிக்க | உயிரிழந்த ராணுவ வீரரின் காதல் கதை - உடைந்து அழுத மனைவி!
அவர் அண்மையில் உடல்நலக்குறைவால் காலமானார். ஸ்ரீநிவாஸ் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி உருக்கமான இரங்கல் குறிப்பு ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில், தருமபுரி ஸ்ரீநிவாஸ் அவர்களின் மறைவு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், ஒருங்கிணைந்த ஆந்திராவின் அரசியலில் தருமபுரி ஸ்ரீநிவாஸ் அவர்களின் பங்களிப்பு என்றென்றும் மறக்க முடியாதவையாக இருக்கும் என தெரிவித்தார். ஆந்திரா உயர்ந்த தலைவரை இழந்திருப்பதாகவும் ராகுல் காந்தி கூறியிருந்தார். மேலும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தருமபுரி ஸ்ரீநிவாஸ் பணிகள் என்றென்றும் நினைவுக்கூரப்படும் என தெரிவித்த ராகுல்காந்தி, அவருடைய களப்பணி காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தியதாகவும், அதனை கடந்து ஸ்ரீநிவாஸின் அன்பும், அடக்கமும் எல்லா அரசியல் கட்சி எல்லைகளையும் கடந்து அவருக்கு அன்பையும், பெரும் மதிப்பையும் பெற்றுக் கொடுத்ததாக தெரிவித்திருந்தார்.
இதற்கு பாஜக எம்பி அரவிந்த் தருமபுரி தன்னுடைய குடும்பத்தின் சார்பில் ராகுல்காந்திக்கு நன்றியை தெரிவித்தார். பாஜக எம்பி காங்கிரஸ் முதலமைச்சரை சந்தித்தும், அவருடைய தந்தை மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல் செய்தி வெளியிட்டதும் அரசியல் களத்தில் உற்றுநோக்கப்படுகிறது. ஏற்கனவே மெஜாரிட்டிக்கு குறைவான இடங்களைப் பெற்றிருக்கும் பாஜக கூட்டணி கட்சிகளின் தயவில் தான் இப்போது ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட பாஜக எம்பிகள் கட்சி தாவினால், மத்தியில் ஆட்சிக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படும் என்பதால் இதனையெல்லாம் அமைதியாக மோடி - அமித்ஷா கூட்டணி கவனித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் ராகுல்காந்தி, இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்ற மைண்ட் செட்டில் இறங்கி அடிக்கவும் தயாராகிவிட்டதால், தேசிய அரசியல் இனி வரும் நாட்களில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ