கோட்சே தேசபக்தர் விவகாரத்தில் சாத்வி பிரக்யா சிங் பகிரங்கமாக மன்னிப்பு வேண்டும்: பிஜேபி

நாதுராம் கோட்சே குறித்து பா.ஜ.க. வேட்பாளரான சாத்வி பிரக்யா தாகூரின் "தேசபக்தி" அறிக்கையை பிஜேபி ஏற்கவில்லை என பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் தெரிவித்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 16, 2019, 05:44 PM IST
கோட்சே தேசபக்தர் விவகாரத்தில் சாத்வி பிரக்யா சிங் பகிரங்கமாக மன்னிப்பு வேண்டும்: பிஜேபி title=

புதுடில்லி: நாதுராம் கோட்சே தேசபக்தர் எனக் கூறிய விவகாரத்தில் சாத்வி பிரக்யா சிங் பகிரங்கமாக மன்னிப்பு வேண்டும் என பிஜேபி செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் கோரிக்கை வைத்துள்ளார்.

இன்று, மத்திய பிரதேசம் மாநிலத்தில் போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும், அக்கட்சியின் வேட்பாளரான பிரக்யா சிங், ஏஎன்ஐ செய்து ஊடகத்துக்கு பேட்டி அளிக்கையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறிய நாதுராம் கோட்சே கருத்துக்கு பதில் அளித்த அவர் கூறியதாவது, "நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தராக இருந்தார். அவர் எப்பொழுதும் தேசபக்தராகவே இருப்பார். நாதுராம் கோட்சேவை தீவிரவாதி என்று கூறியவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்."

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பூகம்பமாக வெடித்துள்ளது. பல கட்சி தலைவர்கள் சாத்வி பிரக்யா மற்றும் பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்தநிலையில், நாதுராம் கோட்சே குறித்து பா.ஜ.க. வேட்பாளரான சாத்வி பிரக்யா தாகூரின் "தேசபக்தி" அறிக்கையை பிஜேபி ஏற்கவில்லை என பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் தெரிவித்துள்ளார். 

அவர் கூறியது, "சாத்வி பிரக்யா தாகூரின் பேச்சை பா.ஜ.க. ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு கட்சி சார்பில் அவருக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் வாக்குமூலம் குறித்து விளக்கம் கேட்டுள்ளோம். நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் எனக் கூறியதற்கு சாத்வி பிராக்யா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Trending News