OMG...ஆணி, ஊசி, ஸ்க்ரூடிரைவர்….எங்க? அறுவை சிகிச்சையில் அதிர்ந்த Doctors!!

18 வயது சிறுவன் ஒருவன், மூன்று அங்குல நீளமுள்ள இரும்பு ஆணிகள், தையல் இயந்திர ஊசிகள் மற்றும் ஒரு ஸ்க்ரூடிரைவரை தன் வயிற்றில் பல நாட்களாக சுமந்து கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 6, 2020, 05:00 PM IST
  • 18 வயதான கரண், வயிற்று வலியால் கடுமையாக அவதிப்படவே, அவர் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
  • கரணுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது, எப்படி, எப்போது, ​​எத்தனை கருவிகளை விழுங்கினான் என்பது தெரியாது – கரணின் தந்தை.
  • அவருக்கு செப்சிஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. – மருத்துவர்கள்.
OMG...ஆணி, ஊசி, ஸ்க்ரூடிரைவர்….எங்க? அறுவை சிகிச்சையில் அதிர்ந்த Doctors!! title=

உன்னாவ்: சில செய்திகள் நம்மை ஆச்சரியத்திற்கு ஆளாக்குகின்றன. சில செய்திகள் நம்மை அதிசயிக்க வைக்கின்றன. சில செய்திகளோ இப்படி கூட நடக்குமா என நம்மை வியக்க வைக்கின்றன. அப்படிப்படட் ஒரு செய்தியைத் தான் இப்போது பார்க்கவுள்ளோம்.

18 வயது சிறுவன் ஒருவன், மூன்று அங்குல நீளமுள்ள இரும்பு ஆணிகள், தையல் இயந்திர ஊசிகள் மற்றும் ஒரு ஸ்க்ரூடிரைவரை தன் வயிற்றில் பல நாட்களாக சுமந்து கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது.

உன்னாவில் (Unnao) உள்ள பத்வா கிராமத்தில் வசிக்கும் 18 வயதான கரண், வயிற்று வலியால் கடுமையாக அவதிப்படவே, அவர் லக்னோ-கான்பூர் நெடுஞ்சாலையில் உள்ள மருத்துவ மனைக்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டார்.

ஸ்கேன் செய்தபிறகு, அவரது வயிற்றில் பல பொருட்கள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

ALSO READ: வைரலாகும் மேட்ரிமோனியல் விளம்பரம், அப்படி என்னதான் இருக்கு அந்த விளம்பரத்தில்?

திங்களன்று அவருக்கு மூன்று மணி நேர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது, மருத்துவர்கள் கூர்மையான முனைகள் கொண்ட இரும்புக் கருவிகள், 30 மூன்று அங்குல இரும்பு ஆணிகள், ஒரு கரடுமுரடான கூர்மையான கருவி, நான்கு அங்குல நீளமுள்ள இரும்புக் கம்பி, நான்கு தையல் இயந்திர ஊசிகள் மற்றும் ஒரு ஸ்க்ரூடிரைவர் ஆகியவற்றை அவரது வயிற்றில் கண்டறிந்தனர்.

நோயாளியின் தந்தை கமலேஷ், கரணுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எப்படி, எப்போது, ​​எத்தனை கருவிகளை விழுங்கினான் என்பது அவர்களுக்குத் தெரியாது என்றும் மருத்துவர்களிடம் கூறினார்.

இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாக உன்னாவின் சுக்லகஞ்ச் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ராதா ராமன் அவஸ்தி தெரிவித்தார்.

"நோயாளி மனநலம் பாதிக்கப்பட்டவராகத் தோன்றுகிறார். ஆனால் அவர் விரைவாக குணமடைகிறார். இரும்பு கருவிகள் அவரது வயிற்றில் எவ்வாறு நுழைந்தன என்ற எங்கள் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. அவருக்கு செப்சிஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அடுத்த ஏழு நாட்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும். அவரது உடல்நிலையை நாங்கள் கண்காணித்து வருகிறோம்” என்று அவர் கூறினார்.

ALSO READ: China horror: ஆன்லைனில் வாங்கப்பட்ட 4000 செல்லப் பிராணிகளுக்கு நேர்ந்த அவலம்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News