புதுடெல்லி: சிபிஎஸ்இ 12 வது வாரிய தேர்வுகள் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முக்கியமான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதாவது 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், சிபிஎஸ்இ தலைவர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவ தொடங்கியதை அடுத்து, CBSE 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாகவும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைப்பதாகவும், ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலைமை மதிப்பாய்வு செய்யப்பட்டு, அதன் பின்னர் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்திருந்த நிலையில், 12-ம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில், இன்று மாலை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், சிபிஎஸ் இ தேர்வுகள் ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மாணவர்களின் உடல் நலனும் பாதுகாப்புமே முக்கியம் என தெரிவித்த பிரதமர் மோடி, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலை நீக்கப்பட வேண்டும் என்றார். மிகவும் நெருக்கடியான இந்த கால கட்டத்தில், மாணவர்கள் தேர்வுகளை எழுதி நிர்பந்திக்கப்படக் கூடாது என்றார்.
அண்மையில், கொரோனா இரண்டாவது அலை, தாக்கம் குறைந்து வந்தாலும், இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்வுகளை நடத்துவது குறித்து மாநில அரசுகளுடன் மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசனைகளை நடத்தியது. இது தொடர்பாக மாநில அரசுகள் தங்கள் விரிவான ஆலோசனைகளையும் , கருத்துக்களையும், தெரிவிக்க வேண்டும் என மத்தியஅரசு கேட்டுக்கொண்டது.
ALSO READ | CBSE 12ம் வகுப்பு தேர்வுகள் நிலை என்ன; பிரதமர் மோடி தலைமையில் முக்கிய ஆலோசனை
இதில், தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பெரும்பாலான மாநிலங்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், சில மாநிலங்கள் மாற்று முறையில் மதிப்பீடு செய்யலாம் என யோசனை கூறியுள்ளன.
Government of India has decided to cancel the Class XII CBSE Board Exams. After extensive consultations, we have taken a decision that is student-friendly, one that safeguards the health as well as future of our youth. https://t.co/vzl6ahY1O2
— Narendra Modi (@narendramodi) June 1, 2021
முன்னதாக, 12-ம் வகுப்புத் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரைணயில், கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், 12-ம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து இன்னும் 2 நாட்களில் தகுந்த முடிவு எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் உடல் நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், 12-ம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில், இன்று மாலை ஆலோசனைக் கூட்டத்தில், அவர் கலந்து கொள்ளவில்லை. கல்வியமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR