பாரத் பந்த்: கட்டாயம் ஊழியர்கள் வேலைக்கு வரவேண்டும்: மம்தா அரசு

மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்கள் ஜனவரி 8 ஆம் தேதி பாரத் பந்த் ஏற்பாடு செய்துள்ளன, ஆனால் மேற்கு வங்க அரசு ஊழியர்களை வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. 

Last Updated : Jan 7, 2020, 04:00 PM IST
பாரத் பந்த்: கட்டாயம் ஊழியர்கள் வேலைக்கு வரவேண்டும்: மம்தா அரசு  title=

மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்கள் ஜனவரி 8 ஆம் தேதி பாரத் பந்த் ஏற்பாடு செய்துள்ளன, ஆனால் மேற்கு வங்க அரசு ஊழியர்களை வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. 

மத்திய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, தேசவிரோத கொள்கைகளை கண்டித்து நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்துள்ளன. கடந்த 2-ஆம் தேதி தொழிற்சங்க தலைவர்கள் வேலைநிறுத்த நோட்டீசை அளித்ததும் மத்திய தொழிலாளர் அமைச்சகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால் அதில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து எந்த உறுதியும் அளிக்கவில்லை. 

தொழிலாளர் மாநாடு இறுதியாக 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. அதன்பின்னர் 2015 ஆகஸ்டு மாதத்தில் தொழிலாளர்களின் 12 அம்ச கோரிக்கைகள் பற்றி பேசுவதற்காக மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. இதுவரை அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தேசநலனுக்கும், வளர்ச்சிக்கும் விரோதமாக பொதுத்துறை நிறுவனங்கள், இயற்கை வளங்கள் மற்றும் பிற தேசிய சொத்துகளை தனியார்மயமாக்குவதிலும், விற்பதிலும் அரசு தீவிர கவனம் செலுத்திவருகிறது. 12 விமான நிலையங்கள் ஏற்கனவே தனியாருக்கு விற்கப்பட்டுவிட்டது. பி.எஸ்.என்.எல்.-எம்.டி.என்.எல். இணைப்பின் மூலம் 93 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு என்ற பெயரில் வேலை இழந்துள்ளனர். ரயில்வேயை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. எனவே மத்திய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, தேசவிரோத கொள்கைகளை கண்டித்து நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் மம்தா அரசாங்கத்தின் மெமோராண்டம், நாளை முதல் பாதியில் அல்லது இரண்டாம் பாதியில் அல்லது முழு நாள் என எந்தவொரு விடுப்பும் ஊழியருக்கும் வழங்கப்படக்கூடாது என்று உத்தரவிட்டது.

ஜனவரி 7 ஆம் தேதி விடுப்பில் இருக்கும் ஊழியர்களும் ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. அதேசமயம் வேலைநிறுத்தம் நாள், வேலைநிறுத்ததின் முந்தைய நாள் விடுப்பு இல்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Trending News