மத்திய அரசு அக்னிபாத் என்ற திட்டத்தை அமல்படுத்தவுள்ளது. அதாவது, இந்தத் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் நான்கு ஆண்டுகள் மட்டும் ராணுவத்தில் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக 4 வருடங்கள் நாங்கள் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு அதற்கு பிறகு என்ன செய்வது போன்ற கேள்விகளுடன் இளைஞர்கள் கொதிப்பில் இருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி போராட்டத்திலும் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ரயில்கள் தீக்கிரையாக்கப்பட்டு ரயில் நிலையங்களும் சூறையாடப்பட்டன. மேலும், பாஜக தலைவர்களின் வீடுகளும், அலுவலகங்களும் தாக்கப்பட்டன.
நிலைமை இப்படி இருக்க, அக்னி வீரர்களுக்கு பாஜக அலுவலகத்தில் வாட்மேன் உள்ளிட்ட வேலைகள் அளிக்கப்படுமென பாஜகவினர் தெரிவித்த கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தி போராட்டக்காரர்களை மேலும் ஆத்திரமடைய செய்துள்ளது.
இதற்கிடையே இளைஞர்கள் மட்டுமின்றி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோரும் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், இத்திட்டத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்கிறது மத்திய அரசு.
இந்நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இயல்பு நிலை இருந்தாலும் டெல்லி, பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
வேறு மாநில போராட்டக்காரர்கள் யாரும் டெல்லிக்குள் நுழைந்துவிடக்கூடாது என்பதால் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருப்பதாகவும் இதனால் அங்கு கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. அதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று நடக்கவிருந்த பள்ளித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
#WATCH | Heavy traffic at Noida-Delhi Link Road at Chilla border due to security checks by UP Police in wake of Bharat Bandh against #AgnipathScheme
ADCP Noida, Ranvijay Singh says, "We're ensuring that no protester can pass through here, we're coordinating with Delhi Police." pic.twitter.com/SczgaxTn3W
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) June 20, 2022
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கடந்த சனிக்கிழமை நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு ரயில் நிலையம் சூறையாடப்பட்டதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்திலும் 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR