புது டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் நாட்டில் கருப்புப்பணம் முற்றிலும் ஒழிக்கப்படும். இனி கள்ள நோட்டு (Fake Indian Currency) புழக்கத்தில் இருக்காது என கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி இரவு தொலைக்காட்சியில் உரையாடிய இந்திய ஒன்றியத்தின் பிரதமர் நரேந்திர மோடி, ரூ.500 மற்றும் ரூ.1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இனி அது “பயனற்ற காகிதத் துண்டுகள்” (Worthless pieces of Paper) . இந்தியாவை கறுப்புப்பணம் இல்லாத நாடாக மாற்றுவோம் எனக்கூறியவர், புதிய 500 மற்றும் 2000 ரூபாய் அறிமுகப்படுத்தினார். இந்த புதிய நாணயத்தாள்கள் பயங்கரவாதத்தையும் ஊழலையும் களையெடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்றும் மற்றும் பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை 2016 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளுங்கள் எனவும் கூறினார்.
பணமதிப்பிழப்பு (Demonetization in India) என்ற இந்த அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள மக்களை உலுக்கியெடுத்தது என்றாலும், இனி நாட்டில் கருப்புப்பணம் மற்றும் கள்ள நோட்டு ஒழிந்துவிடும் என்ற நம்பிக்கையில், தங்கள் பழைய நோட்டுகளை வங்கிகளில் அளித்து, புதிய நோட்டுக்களை பெறுவதற்காக, பெண்கள் உட்பட இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை வங்கிகள் மற்றும் ஏடிஎம் முன் காத்துக்கிடந்தார்கள். இதில் பலர் உயிரிழந்தார்கள். இன்றுவரை பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் (Modi Govt) தோல்வி என விமர்சனம் செய்து வருகின்றனர்.
ALSO READ | கிழிந்த ரூபாய் நோட்டை மாற்ற வேண்டுமா? இந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்!
புதிய நோட்டுக்கள் மிகவும் பாதுகாப்பானது என்றும், அவைகளை கள்ளநோட்டுக்காரர்களுக்கு நகலெடுப்பது கடினம் என்றும் ஒன்றிய அரசு தரப்பில் கூறப்பட்டது. இத பாஜக தலைவர்கள் ஒவ்வொரு மேடையிலும் சமூக வலைத்தளங்களில் மிகவும் பெருமையாக பேசினார்கள். பணமதிப்பிழப்பு மூலம் லஞ்சத்தை ஒழிக்க முடியும், கள்ள நோட்டை தடுக்க முடியும், புதிய இந்தியாவை உருவாக்க முடியும் என்றெல்லாம் பாஜக தரப்பில் கூறப்பட்டு வந்தது. ஆனால் அது நடந்ததா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
2020-21 ஆம் ஆண்டில் ரூ .500 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் (Fake Banknote) அதிக புழக்கத்தில் இருந்தது கண்டறியப்பட்டது என இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2020-21 ஆண்டில் கண்டறியப்பட்ட கள்ள நோட்டுகளில் புதிய 500 ரூபாய் கள்ள நோட்டு 31.3 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதேபோல பிற பிரிவுகளில் உள்ள ரூபாய் நோட்டுகளிலும் கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்டன.
இந்த ஆண்டில் புதிய 500 ரூபாய் மதிப்புள்ள 39,453 போலி ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் 1.11 லட்சம் மதிப்புள்ள போலி ரூ .100 நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ALSO READ | 5, 10, 100 ரூபாய் நோட்டு இனி செல்லாதா? RBI என்ன சொல்கிறது!
இந்த ஆண்டில் மொத்தம் 2.09 லட்சம் போலி ரூபாய் நோட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை 2019-20 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட 2.97 லட்சம் போலி நோட்டுகளுடன் ஒப்பிடும் போது கணிசமாகக் குறைந்துள்ளது.
புதிய ரூ .500 நோட்டுகள் (New Rs 500 Notes), பழைய நோட்டுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை. புதிய நோட்டின் நிறம், அளவு, அதன் வடிவமைப்பு ஆகியவற்றிலிருந்து வேறுபட்டவை. புதிய நோட்டின் அளவு 66மிமீ x 150மிமீ ஆகும்.
தற்போது, ரிசர்வ் வங்கி ரூ .2, ரூ 5, ரூ .10, ரூ .20, ரூ .50, ரூ .100, ரூ .200, ரூ .500 மற்றும் ரூ .2,000 என்ற மதிப்பில் ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது. அதேபோல நாட்டில் 50 பைசா, ரூ 1, ரூ 2, ரூ 5, ரூ 10 மற்றும் ரூ .20 மதிப்பில் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன.
ALSO READ | New Rs 100 Note: வார்னிஷ் பூச்சுடன் விரைவில் வெளிவரும் 100 ரூபாய் நோட்டு: RBI
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR