Karnataka: கர்நாடகாவின் அடுத்த முதல்வராக பாரதீய ஜனதா மீண்டும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவரை நியமிக்க வாய்ப்புள்ளது என்று கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்திருந்த நிலையில், லிங்காயத் சமூகத்தை எம்.எல்.ஏ-வான தற்போதைய கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் போமாய் (Basavaraj Bommai) முதலமைச்சர் பதவிக்கு தேர்வு செயப்பட்டு உள்ளார்.
திங்களன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பி.எஸ்.எடியூரப்பாவும் (BS Yediyurappa) அரசியல் ரீதியாக செல்வாக்கு மிக்க இந்த சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.
கர்நாடகா பாஜக கூட்டத்தில் மாநிலத்தின் புதிய முதல்வரை தேர்ந்தடுக்கப்பட்டதை அடுத்து, நாளை பிற்பகல் 3.20 மணிக்கு முதல்வராக பதவியேற்கவுள்ளார்.
பசவராஜ் போமாய் யார்?
ஜனவரி 28, 1960 இல் பிறந்த பசவராஜ் போமாய் சதாரா லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர். பி.எஸ்.எடியூரப்பாவின் நெருங்கிய நம்பிக்கை கொண்டவர்.இவரது தந்தை எஸ்.ஆர்.போமாய்யும் கர்நாடக முதல்வராக பதவி வகித்துள்ளார். 2008 முதல் பசவராஜ் போமாய் பாஜகவில் பணியாற்றி வருகிறார்.
ALSO READ | கர்நாடகா முதல்வர் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார்
பி.எஸ்.எடியூரப்பா ராஜினாமா:
கர்நாடக முதலமைச்சராக இருந்த தனது இரண்டு ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் பி. எஸ். எடியூரப்பா (B. S. Yediyurappa) நேற்று (ஜூலை 26) ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR