பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் இதுவரை நடக்காத வரலாற்று நிகழ்வு

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய வங்கிகள் 12 லட்சத்து 50 ஆயிரத்து 553 கோடி ரூபாயை, கடந்த 9 ஆண்டுகால பிரதமர் மோடி ஆட்சியில் இழந்துள்ளன. ஆர்பிஐ கொடுத்துள்ள விளக்கத்தில் இது தெரியவந்துள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 5, 2023, 08:41 PM IST
  • பிரதமர் மோடி ஆட்சியில் வரலாற்று நிகழ்வு
  • 9 ஆண்டுகளில் வங்கிகள் இழந்த தொகை
  • இதனை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் இதுவரை நடக்காத வரலாற்று நிகழ்வு  title=

பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்றதும் அனைத்து குடிமகன்களுக்கும் வங்கி கணக்கு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான திட்டமும் செயல்படுத்தப்பட்டது. அப்போது ஏழைகளின் ஒவ்வொரு ரூபாயும் பாதுகாப்பாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால், கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் இதுவரை இந்திய வரலாற்றில் நடைபெறாத அளவுக்கு 12 லட்சத்து 50 ஆயிரத்து 553 கோடி ரூபாய்களை வங்கிகள் இழந்திருக்கிறது என்ற தகவல் ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இதில் தனியார் வங்கிகளும் தப்பிக்கவில்லை என்றாலும், பொதுத்துறை வங்கிகளே அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன. 

மேலும் படிக்க | அரசு வேலை தேடுகிறீர்களா..? இது போன்றவரின் வலையில் சிக்காமல் இருங்கள்!

இவ்வளவு பெரிய தொகை இழப்பு குறித்து பொதுவெளியில் எந்த விவாதமும் இதுவரை எழாமல் இருப்பது ஆச்சரியமாக இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். மன்மோகன் சிங் ஆட்சியில் நிதி மோசடிகள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டதாகவும், மோசடியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மிகபெரிய அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அப்போது மிகப்பெரிய செல்வாக்கில் இருந்த ராமலிங்க ராஜூ நிதி மோசடி புகாரில் சிக்கியபோது முறையான நீதிமன்ற நடவடிக்கை மூலம் சிறைக்கு அனுப்பப்பட்டதாக அடிகோடிட்டுள்ளனர். ஆனால், பிரதமர் மோடி ஆட்சியில் வங்கி மோசடியில் சிக்கியவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தாலும், அவர்கள் மீண்டும் இந்தியா கொண்டுவரப்படவில்லை என கூறுகின்றனர்.

நிதி மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பிச் சென்றவர்களில் ஒருவரை கூடவா? 9 ஆண்டுகளில் இந்தியாவுக்கு அழைத்து வந்து முறையான நடவடிக்கைக்கு உட்படுத்த முடியவில்லை என்றும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும்போது, அதாவது வங்கி மோசடி பணத்தை மீட்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், மோசடியை கண்டறிந்தால் வங்கிகள் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்பதுடன் தன்னுடைய பதிலை முடித்துக் கொண்டார்.

மத்திய இணையமைச்சர் பங்கஜ் சவுத்திரி இது குறித்து பேசும்போது, வெளிநாடு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து அரசாங்கம் இதுவரை 15,113 கோடி ரூபாயை மீட்டுள்ளது என பதிலளித்தார். குறிப்பாக, பிரதமர் மோடி ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு வாராக் கடன்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதும் தெரியவந்துள்ளது. இந்த இழப்புகள் எல்லாம் சாதாரண வங்கி வாடிக்கையாளர்கள் மூலம் சரிசெய்யவே வங்கிகள் முயன்று கொண்டிருப்பதாக அடிகோடிடும் நிபுணர்கள், இது குறித்து முறையான விவாதம் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளனர். 

கல்வி, சுகாதாரம் மற்றும் கிராமப்புற வேலை வாய்ப்புகளுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்கும் மத்திய அரசு, இந்த வராத 12.5 லட்சம் கோடிகளை திரும்பப்பெற தீவிரமான அணுகுமுறை காட்டாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. சாதாரண குடிமகன் ஒரே ஒருமுறை தவணை தவறினாலோ, இஎம்ஐ கட்ட வேண்டிய குறிப்பிட்ட தேதியில் சில 10 ரூபாய்கள் இல்லாமல் இருந்தாலோ கறாராக அபராதம் வசூலிக்கும் வங்கிகளும், இத்தனை ஆயிரம் கோடி ரூபாய்களை பெரும் தொழிலதிபர்களிடம் இழப்பதை எப்படியான அணுகுமுறையாக எடுத்துக் கொள்வது என்ற கேள்வியை எழுப்புகிறது.  

மேலும் படிக்க | இந்தி மொழி திணிப்பா? அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News