மேற்கு வங்க தலைநகரம் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் வங்கியான பந்தன் வங்கி மார்ச் 15 முதல் மூன்று நாட்களுக்கு சுமார் 688.6 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்கிறது. இந்த பங்குகளின் விலை ரூ 370 முதல் ரூ 375 வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பந்தன் வங்கியின் பங்குகளை விற்பனையே, இதுவரை வங்கித் துறையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய பங்கு வெளியீடாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
பந்தன் வங்கியின் பங்குகளை நிர்வகிக்க கோட்டக் மகிந்திரா கேப்பிட்டல், ஆக்சிஸ் கேப்பிட்டல், கோல்டுமேன் சாக்ஸ் செக்யூ ரிட்டிஸ், ஜே.எம். பைனான்சியல் இன்ஸ்டியூஷனல் செக்யூரிட்டீஸ் மற்றும் ஜே.பி.மார்கன் இந்தியா போன்றவை நியமிக்கப்பட்டு உள்ளன.
இந்தியாவில் முதன்முதலாக குறுங்கடன் துறையிலிருந்து வங்கித் துறைக்கு பந்தன் வங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பந்தன் வங்கி 2017-ம் ஆண்டு டிசம்பர் வரையிலான 9 மாத காலத்திற்கு மொத்த லாபம் ரூ. 960 கோடி என்றும், 2017-ம் ஆண்டு முழுவதும் லாபம் ரூ 1,100 கோடி லாபம் ஈட்டியதாக பந்தன் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.