மத்திய பிரதேசத்தில் உள்ள மக்கள், தங்கள் குழந்தைகளை மாட்டு சாணத்தின் மீது படுக்கவைத்து வழிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
மத்தியபிரதேச மாநிலம், பெத்தூரில் உள்ள மக்கள் தங்கள் குழந்தைகளை கோவர்த்தன பூஜையின் போது, மாட்டு சாணத்தின் மீது படுக்க வைத்து வழிபாடு நடத்தினர்.
இத்தகு வேண்டுதல்கள் மூலம் தங்கள் குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடனும், நோய் தொற்று இல்லாமல் நீண்ட நாள் வாழ வழிவகுக்கும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
MP: People in #Betul lay their children on Cow dung on #GovardhanPooja, believing it would bring them good health & protection from diseases pic.twitter.com/6rPT5YFBb0
— ANI (@ANI) October 20, 2017
சுகாதார ஆர்வளர்கள் இதுபற்றி தெரிவிக்கையில், சாணத்தின் மீது படுக்கவைப்பதினால் குழந்தைகளுக்கு பிரச்சனைகள் வர வாய்ப்புகள் அதிகம் எனவும், இத்தகு மூடநம்பிக்கைகளை மக்கள் கைவிட வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்!