SCO கூட்டத்தை விட்டு வெளியேறிய இந்தியா.. நடந்தது என்ன..!!!

பாகிஸ்தானின் நடவடிக்கை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்  (SCO) உறுப்பு நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அனைத்து விதிமுறைகளுக்கும் எதிரானது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 15, 2020, 11:09 PM IST
  • பாகிஸ்தானின் நடவடிக்கை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உறுப்பு நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அனைத்து விதிமுறைகளுக்கும் எதிரானது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
  • ரஷ்யா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் டோவல் (Ajit Doval) வெளிநடப்பு செய்தார்.
  • ரஷ்ய கூட்டமைப்பின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ், பாகிஸ்தான் செய்ததை மாஸ்கோ ஆதரிக்கவில்லை என்று கூறினார்.
SCO கூட்டத்தை விட்டு வெளியேறிய இந்தியா.. நடந்தது என்ன..!!! title=

இந்தியாவின் (India)  சில பகுதிகளை, பாகிஸ்தானின் ஒரு பகுதியாக  காட்டும் "கற்பனையான" வரைபடத்தைப் பாகிஸ்தான் பயன்படுத்தியதை அடுத்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (Shanghai Cooperation Organisation) உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டத்தில் இருந்து இந்தியா செவ்வாய்க்கிழமை வெளியேறியது. 

ரஷ்யா தலைமையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் டோவல் (Ajit Doval)  வெளிநடப்பு செய்தார்.

"இது கூட்டத்தின் விதிமுறைகளை மீறுவதாகும். கூட்டத்தை நடத்து நாட்டுடன் கலந்தாலோசித்த பின்னர், இந்திய கூட்டத்தை விட்டு வெளியேறியது" என்று வெளிவிவகார அமைச்சகம் (MEA) செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை எஸ்சிஓ விதிகளின் "அப்பட்டமான மீறல்" என்றும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அனைத்து விதிமுறைகளுக்கும் எதிரானது என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியா தனது வலுவான ஆட்சேபனையை வெளியிட்டதாகவும், வரைபடத்தை பயன்படுத்த வேண்டாம் என்று பாகிஸ்தானை வற்புறுத்துவதற்கு ரஷ்ய தரப்பு மிகவும் கடுமையாக முயன்றதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் படிக்க | இந்தியா எதற்கும் தயாராக உள்ளது: மக்களவையில் Rajnath singh

ரஷ்ய கூட்டமைப்பின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ், பாகிஸ்தான் செய்ததை மாஸ்கோ ஆதரிக்கவில்லை என்றும், "ஆத்திரமூட்டும்  இந்த செயல்" ஷாங்காய் கூட்டமைப்பின் கூட்டத்தில் இந்தியா அளிக்கும் பங்களிப்பை பாதிக்காது என்றும் நம்பிக்கை வெளியிடார்.

பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடந்த மாதம் பாகிஸ்தான் காஷ்மீர் முழுவதையும் தனது பிரதேசத்தின் ஒரு பகுதியாகக் காட்டும் புதிய வரைபடத்தை வெளியிட்டது. இந்த வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் மட்டுமல்லாமல் குஜராத்தின் ஜுனாகரும் பாகிஸ்தானை சேர்ந்த பகுதிகளாக காட்டப்பட்டன.

இந்தியா புதிய வரைபடத்தை "அரசியல் அபத்தம்" என்று நிராகரித்ததுடன், குஜராத்தில் உள்ள பிரதேசங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களை பாகிஸ்தான் ஒரு போது உரிமை கோர முடியாது எனவும் கூறியது.

மேலும் படிக்க | MPக்களின் சம்பளத்தை 30% குறைப்பதற்கான மசோதாவை மக்களவை நிறைவேற்றியது

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News