பெங்களூரு: கடந்த நவம்பர் 25-ஆம் நாள் உடல்நல குறைவால் பெங்களூருவில் காலமான முன்னாள் மத்திய அமைச்சர் சி.கே. ஜாபர் ஷெரிப் அவர்களது குடும்பத்தாரை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்!
முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவர் சி.கே. ஜாபர் ஷெரிப் கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
85-வயதான சி.கே. ஜாபர் ஷெரிப், கர்நாடகாவின் முன்னேற்றத்திற்காக பெரிதும் பாடுப்பட்டவர்.
Finance Minister Arun Jaitley met the family of late Congress leader CK Jaffer Sharief, today in Bengaluru. Sharief had passed away on November 25. #Karnataka pic.twitter.com/8n10YfZHW7
— ANI (@ANI) November 29, 2018
கன்னிங்காம் சாலையில் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த ஷெரிப், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். கடந்த வெள்ளி அன்று நமாஸ் செல்கையில் மயங்கி விழுந்த ஷெரிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தது குறிப்பிட்டத்தக்கது.
இந்நிலையில் இன்று அன்னாரது குடும்பத்தாரை சந்திது ஆறுதல் தெரிவிக்கும் விதமாக மத்திய நித அமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் பெங்களுருவில் உள்ள சி.கே. ஜாபர் ஷெரிப் வீட்டில் அவரது குடம்பத்தாரை சந்தித்தார்!