குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிராக தீவிரமாகும் போராட்டம்...

டெல்லியில் உள்ள நியூ பிரண்ட்ஸ் காலனியில் ஞாயிற்றுக்கிழமை குடியுரிமை (திருத்த) சட்ட எதிர்ப்பாளர்கள் காவல்துறையினருடன் நடத்திய மோதலில் மூன்று பேருந்துகள் எரிக்கப்பட்டன, கார்கள் மற்றும் பைக்குகள் அடித்து நொறுக்கப்பட்டன.

Last Updated : Dec 15, 2019, 06:30 PM IST
குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிராக தீவிரமாகும் போராட்டம்... title=

டெல்லியில் உள்ள நியூ பிரண்ட்ஸ் காலனியில் ஞாயிற்றுக்கிழமை குடியுரிமை (திருத்த) சட்ட எதிர்ப்பாளர்கள் காவல்துறையினருடன் நடத்திய மோதலில் மூன்று பேருந்துகள் எரிக்கப்பட்டன, கார்கள் மற்றும் பைக்குகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதனிடையே ஆர்ப்பாட்டகாரர்களக்கு பதில் அளிக்கும் விதமாக காவல்துறையினர் கிளர்ந்தெழுந்த மக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

டெல்லியின் ஜாமியா நகர் அருகே ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) குடியுரிமை எதிர்ப்பு போராட்டக்காரர்களால் மூன்று பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. தீயைக் கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு விரைந்த நான்கு தீயணைப்பு டெண்டர்களும் எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்டன. இந்த தாக்குதலில் இரண்டு தீயணைப்பு படையினர் காயமடைந்துள்ளதாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

எனினும் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் மாணவர்கள் வன்முறையிலிருந்து தங்களை ஒதுக்கி வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையில்., "எந்தவொரு வன்முறை போராட்டத்திற்கும் தாங்கள் ஆதரவளிக்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் "டெல்லியின் தெருக்களில் நடக்கும் வன்முறைகளில் எந்த ஜாமியா மாணவரும் ஈடுபடவில்லை. இவை ஜாமியா மாணவர்களின் உடையில் வன்முறையைத் தூண்டும் நோக்கத்தில் அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது" என்று ஜாமியா மாணவர் சங்கமும் நிர்வாகமும் தெரிவித்துள்ளன.

கடந்த மூன்று நாட்களாக ஜாமியா நகரில் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்களும், உள்ளூர் மக்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். 

முன்னதாக கடந்த வெள்ளியன்று (டிசம்பர் 13), குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்துவதற்காக நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுத்துச் செல்வதை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் மாணவர்கள் காவல்துறையினருடன் மோதல் நடத்தினர். 

ஆர்ப்பாட்டம் காரணமாக ஓக்லா அண்டர்பாஸிலிருந்து சரிதா விஹார் வரை வாகன இயக்கம் மூடப்பட்டதாக முன்னதாக ஞாயிற்றுக்கிழமை டெல்லி காவல்துறை தெரிவித்திருந்தது. நியூ பிரண்ட்ஸ் காலனிக்கு எதிரே உள்ள மதுரா சாலையை எதிர்ப்பாளர்கள் தடுத்துள்ளதாகவும், பாதர்பூர் மற்றும் ஆசிரம சௌக்கிலிருந்து போக்குவரத்து சாலை முற்றுகை காரணமாக மாற்று பாதைகளுக்கு திருப்பி விடப்பட்டதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை புதிய சட்டத்தை ஆதரிக்கும் வகையில் குரல் கொடுத்திருந்தார். இதன் காரணமாக போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இன்று, மேற்கு வங்க அரசு அரசாங்கத்தின் சில மாவட்டங்களில் இணைய சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் துன்புறுத்தப்பட்ட மத சிறுபான்மையினருக்கும் புலம் பெயர்ந்தவர்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமைச் சட்டம், மக்களவையில் திங்கள்கிழமை, ராஜ்யசபாவில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது, இதனைத்தொடர்ந்து வியாழக்கிழமை ஜனாதிபதியால் கையெழுத்தானது. குடியுரிமைச் சட்டம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில், குறிப்பாக வடகிழக்கில் மக்களின் போராட்டங்களுக்கு வழிவகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News