உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளதையொட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷா வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சனிக்கிழமையும் வீடு வீடாகச் செல்லும் பிரச்சாரத்தை முன்னெடுத்த அவர், தியோபந்த் பகுதியிலிருந்து பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார்.
ALSO READ | 3 மாநிலங்களில் ஆட்சி உறுதி - அடித்து சொல்லும் காங்., தலைவர்
MBD சவுக்கில் பிரச்சாரத்தை தொடங்கியபோது, சுமார் 25 நிமிடங்கள் அவர் பிரச்சாரத்தில ஈடுபடுவதாக இருந்தது. கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டதால், பிரச்சாரத்தை தொடங்கிய 5 நிமிடங்களில் பரப்புரையை அமித் ஷா முடித்துக் கொண்டார். ஏற்கனவே, அமித் ஷாவின் பிரச்சாரத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். சமூக வலைதளங்களிலும் அவருடைய பிரச்சாரத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இன்றைய பிரச்சாரத்தை அவர் தொடரவில்லை.
ALSO READ | கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை
இதனையடுத்து சஹாரன்பூரில் உள்ள ஐஐஎம்டி கல்லூரியில் பேசிய அமித் ஷா, தேவ்பந்த் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டிருந்தேன். ஆனால், மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டேன் என தெரிவித்தார். தனக்காக காத்திருந்த மக்களிடம் வருத்தம் தெரிவிப்பதாக கூறிய அவர், இந்த முறை பா.ஜ.கவுக்கு வாக்களித்தால் குண்டர்கள், மாஃபியாக்கள் விரட்டியடிக்கப்படுவார்கள் எனக் கூறினார்.
மக்கள் பா.ஜ.க மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிவித்த அமித்ஷா, எதிர்கட்சிகள் எத்தனைபேர் ஒரணியில் திரண்டாலும் பா.ஜ.க ஆட்சியை பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளின் ஆட்சியில் உத்தரப்பிரதேசத்தை குண்டர்கள் ஆண்டதாக தெரிவித்த அமித்ஷா, இப்போது அந்த நிலை இல்லை எனக் கூறினார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR