ஆப்கானிஸ்தானில் சிக்கிய 168 பேருடன் காசியாபாத் வந்தடைந்தது இந்திய சிறப்பு விமானப்படை

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 22, 2021, 12:19 PM IST
ஆப்கானிஸ்தானில் சிக்கிய 168 பேருடன் காசியாபாத் வந்தடைந்தது இந்திய சிறப்பு விமானப்படை title=

காஜியாபாத்: ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத அமைப்பான தலிபான் ஆக்கிரமிப்புக்கு பிறகு அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், ஆப்கானிஸ்தானின் குடிமக்கள், அங்குள்ள மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட, நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கின்றனர். அதன்படி இந்திய அரசு ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையில் ஆப்கானிஸ்தான் (Afghanistan) தலைநகர் காபூலில் (Kabul) இருந்து இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் 107 இந்தியர்கள் உட்பட 168 பேருடன் இந்தியா திரும்பியது. ஏற்கனவே காபூல் விமான நிலையத்தில் இருந்து 85 இந்தியர்கள் இந்திய விமானப்படை விமானம் மூலமாக துஷான்பே விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், அங்கிருந்து அவர்கள் அனைவரும் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | ஆப்கானிஸ்தானை கட்டமைப்பது எங்கள் வேலை அல்ல: ஜோ பைடன்

இந்நிலையில் இன்று காலையில், 107 இந்தியர்கள் உட்பட 168 பேருடன் காபூலில் இருந்து இந்திய விமானப்படை விமானம் புறப்பட்டதாக வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்தார். காபூல் விமான நிலையத்தில் காத்திருந்த இந்தியர்கள் 107 பேர் இன்று காலை இந்திய விமானப்படை சிறப்பு விமானம் மூலம் இந்தியாவுக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். இந்த விமானம் உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் காலை 10.15 மணியளவில் விமானம் தரையிறங்கியது.

 

 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் முதலில் RT-PCR பரிசோதிக்கப்பட்டு பின்னர் அவர்கள் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Afghanistan Update: 800 பேரை ஏற்றிக்கொண்டு ஆப்கானிலிருந்து பறந்த விமானத்தின் புகைப்படம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News