ராஜஸ்தானில் பேருந்து மோதி ஒருவர் பலி!

ராஜஸ்தானில் பைக் மீது பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 2 பேர் காயமடைந்துள்ளனர்.

Last Updated : Dec 2, 2017, 11:57 AM IST
ராஜஸ்தானில் பேருந்து மோதி ஒருவர் பலி! title=

ராஜஸ்தானில் உள்ள பாரத்பூர் என்ற இடத்தில் பைக் ஒன்றின் மீது அதிவேகத்தில் வந்த பேருந்து மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 2 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் மூவரும் உறவினர் வீட்டிற்கு செல்லும் வழியில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களின் சிகிசைக்காக அம்புலன்ஸ்ஸிடம் தொடர்பு கொண்ட போது அம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் சம்பவ இடத்திலே ஒருவர் மயக்கமடைந்தார். காயமடைந்தவர்களை ஆட்டோ ரிக்சாவில் கொண்டு சென்ற போது செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 2 பேர் சிகிசைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Trending News