7th Pay Commission நற்செய்தி: வேரியபல் அகவிலைப்படியை அதிகரித்தது மத்திய அரசு

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை, 1.5 கோடிக்கும் அதிகமான ஊழியர்களுக்கு நல்ல செய்தியை அளித்துள்ளது. வேரியபல் டி.ஏ.-வில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 21, 2021, 11:41 PM IST
  • கோடிக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி வந்துள்ளது.
  • மத்திய அரசு ஊழியர்களின் வேரியபல் டி.ஏ. அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • இது மத்திய துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய விகிதத்தையும் அதிகரிக்கும்.
7th Pay Commission நற்செய்தி: வேரியபல் அகவிலைப்படியை அதிகரித்தது மத்திய அரசு title=

Govt hikes variable DA for Central Govt Employees: கோடிக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி வந்துள்ளது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை, 1.5 கோடிக்கும் அதிகமான ஊழியர்களுக்கு நல்ல செய்தியை அளித்துள்ளது.

வேரியபல் டி.ஏ. அதாவது வேரியபல் அகவிலைப்படியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) மாதத்திற்கு ரூ.105 முதல் ரூ.210 வரையிலான அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு, ஏப்ரல் 1, 2021 முதல் அமலுக்கு வரும். இது மத்திய துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய விகிதத்தையும் அதிகரிக்கும்.

மத்திய துறையில் திட்டமிடப்பட்ட வேலைவாய்ப்புக்காக நிர்ணயிக்கப்பட்ட விகிதங்கள் மத்திய அரசு, ரயில்வே நிர்வாகம், சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள், முக்கிய துறைமுகங்கள் மற்றும் மத்திய அரசால் நிறுவப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் அரசாங்கம் கூறியது. இந்த விகிதங்கள் ஒப்பந்த மற்றும் சாதாரண ஊழியர்கள் / தொழிலாளர்களுக்கும் பொருந்தும்.

வேரியபல் கொடுப்பனவின் விகிதங்களில் செய்யப்பட்டுள்ள திருத்தம் ஏப்ரல் 1, 2021 முதல் அமலுக்கு வரும் என தொழிலாளர் அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. 

ALSO READ: 7th Pay Commission: DA அரியர் தொகை கிடைக்குமா, கிடைக்காதா? குழப்பத்தில் ஊழியர்கள்

"தொழில்துறை பணியகத்தால் தொகுக்கப்பட்ட விலைக் குறியீடான தொழில்துறை தொழிலாளர்களுக்கான சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் (CPI-IW) வேரியபல் அகவிலைப்படி (VDA) திருத்தப்பட்டுள்ளது. ஜூலை முதல் டிசம்பர் 2020 வரையிலான சராசரி CPI-IW சமீபத்திய VDA திருத்தத்தை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டது " என அமைச்சகத்தின் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சந்தோஷ் கங்வார் கூறுகையில், “இது நாடு முழுவதும் மத்திய துறையில் பல்வேறு திட்டமிடப்பட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ள சுமார் 1.50 கோடி தொழிலாளர்களுக்கு பயனளிக்கும். VDA-வின் இந்த உயர்வு இந்த தொழிலாளர்களுக்கு (Employees), குறிப்பாக தற்போதைய தொற்றுநோய்  காலங்களில் ஆதரவாக இருக்கும்" என்றார். 

மத்திய துறையில் குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தை அமல்படுத்துவது,  மத்திய துறையில் திட்டமிடப்பட்ட வேலையில் ஈடுபடும் ஊழியர்களுக்காக, நாடு முழுவதும் உள்ள தலைமை தொழிலாளர் ஆணையரின் (மத்திய) ஆய்வு அதிகாரிகள் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

ALSO READ:7th Pay Commission: ஜூலை மாதம் முதல் தேதி முதல் 28% வரை சம்பள உயர்வு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News