13 வெயிட்டர் பணியிடத்திற்கு 7000 பேர் விண்ணப்பம்!

மகாராஷ்டிரா மாநில தலைமைச்செயலக கேண்டினில் காலியாக உள்ள 13 வெயிட்டர் காலிபணியிடத்திற்கு 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 

Last Updated : Jan 18, 2019, 09:31 PM IST
13 வெயிட்டர் பணியிடத்திற்கு 7000 பேர் விண்ணப்பம்! title=

மகாராஷ்டிரா மாநில தலைமைச்செயலக கேண்டினில் காலியாக உள்ள 13 வெயிட்டர் காலிபணியிடத்திற்கு 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 

மராட்டிய  தலைமைச்செயலகமான மந்திராலயா கேண்டீனில் 13 வெயிட்டர் பணி இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக கல்வி தகுதியாக 4 -ம் வகுப்பு எனவும் வயது வரம்பு 25 முதல் 27 வரை எனவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 

தற்போது இந்த பணிக்காக 7 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்தன. விண்ணப்பதாரர்களில் பெரும்பாலானவர்கள் பட்டதாரிகளே. இதில் தற்போது 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 12 பேர் பட்டதாரிகள். ஒருவர் 12-ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்.

இதற்கிடையே நாட்டின் வேலைவாய்ப்பின்மை குறித்து எண்ணி வெட்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். 

Trending News