உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியாகியுள்ளனர். இதில் ஒரு குழந்தையும் அடங்கும்.
பான்பூரில் இருந்து தியுட்டினி வழி சென்ற கார் நிலைதடுமாறி அருகில் இருந்து சுமார் 600 மீட்டர் ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது. இந்த காரில் பயணித்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் பரிதாபமாக பலியாகினர்.
பான்பூர் கிராமத்திற்கு அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் மூன்று பெண்கள், ஒரு குழந்தை சம்பவயிடத்திலேயே பரிதாபமாக பலியானர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்வானது சமீபத்தில் உத்திரபிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டா பகுதியில் நிகழ்ந்த கோர விபத்தை அடுத்து நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கிரோட்டர் நோய்டாவில் நிகழ்ந்த சாலை விபத்தானது யமுனை ஆற்றங்கரையில் தாஜ்மகால் நோக்கி பயணித்த குடும்பத்தாரின் விபத்து ஆகும்.
இந்த கொடூர சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலியானது குறிப்பிட்டத்தக்கது. இதில் 5 பெண்கள் பலியாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.