ராம் ஜென்மபூமி-பாபர் மசூதி நில மோசடி வழக்கு SC இன்று பரிசீலனை..

அயோத்தி வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டது!!

Last Updated : Mar 6, 2019, 09:24 AM IST
ராம் ஜென்மபூமி-பாபர் மசூதி நில மோசடி வழக்கு SC இன்று பரிசீலனை.. title=

அயோத்தி வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டது!!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லாலா ஆகியவை தங்களுக்குள் சரிசமமாக மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என அலாகாபாத் நீதிமன்றம் கடந்த 2010 ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.

டந்த 2010 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் "ராமஜென்ம பூமி" என கூறப்படும் சர்ச்சைக்குரிய நிலம் குறித்த வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றம்சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லாலா ஆகியவை தங்களுக்குள் சரிசமமாக மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யப்பட்டது. 

அயோத்தி வழக்கு தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது. நீதிபதி போப்டே விடுப்பில் இருந்ததால் கடந்த மாதம் 29 ஆம் தேதி நடைபெற இருந்த விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 277 ஏக்கர் நிலத்தை ராம்லல்லா, நிர்மோயி அக்சரா, வக்பு வாரியம் ஆகிய மூன்று தரப்பினருக்கு சமமாகப் பங்கிட்டுத் தரும்படி அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புமீது 14 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே கடந்த மாதம் 26 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், இந்து-முஸ்லீம் மதத்தினரிடையே சுமூகமான உறவை ஏற்படுத்த நீதிமன்றம் விரும்புகிறது என்றும், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்துவதற்கான மத்தியஸ்தரை நியமனம் செய்வது தொடர்பாக மார்ச்-6 ஆம் தேதி பரிசீலிக்க உள்ளோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் விசாரணை புதன்கிழமை நடைபெறவுள்ளது. அப்போது, மத்தியஸ்தரை நியமிப்பது தொடர்பாக நீதிமன்றம் பரிசீலித்து முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Trending News