ஊரடங்கு காலத்தில் 5 கோடி அபராதம் வசூல்.. 1.28 லட்சம் வாகனங்கள் பறிமுதல்

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கு காலத்தின் போது விதிமுறைகளை மீறியதற்காக ராஜஸ்தான் காவல்துறை 1.28 லட்சம் வாகனங்களை மோட்டார் வாகன ( Motor Vehicle Act ) சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்து, 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 12, 2020, 12:52 PM IST
ஊரடங்கு காலத்தில் 5 கோடி அபராதம் வசூல்.. 1.28 லட்சம் வாகனங்கள் பறிமுதல் title=

ராஜஸ்தான்: கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கு காலத்தின் போது விதிமுறைகளை மீறியதற்காக ராஜஸ்தான் (Rajasthan) காவல்துறை 1.28 லட்சம் வாகனங்களை மோட்டார் வாகன ( Motor Vehicle Act ) சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்து, 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது என்று உயர் அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

மேலும் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக மாநிலத்தில் சுமார் 14,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் போலீஸ் இயக்குநர் (குற்ற) பி.எல். சோனி தெரிவித்தார்.

ஊரடங்கு விதிமுறைகளை மீறியதற்காக பேரழிவு மேலாண்மை சட்டம் (Disaster Management Act), தொற்றுநோய் சட்டம் (Pandemic Act) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (Indian Penal Code ) பிரிவுகளின் கீழ் 5,600 க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் போது பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 409 பேர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களின் தாக்குதலுக்கு மருத்துவர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் கட்டுப்படுத்த போராடும் பிற தொழிலாளர்கள் ஆவார்கள்.

சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்தியதற்காக காவல்துறை இதுவரை 199 வழக்குகளை பதிவு செய்து, அதில் 280 பேர் மீது "சமூக விரோத நடவடிக்கை" பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

அத்தியவாசிய பொருட்களை சந்தைப்படுத்துபவர்களை போலீசாரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. ஊரடங்கு காலத்தில் "பதுக்குதல்" நடவடிக்கையில் ஈடுபட்ட கடைக்காரர்களுக்கு எதிராக அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் 121 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மூத்த அதிகாரி தெரிவித்தார்.

Trending News