அயோத்தி தீவிரவாத தாக்குதல் வழக்கு: ஒருவர் விடுதலை; 4 பேருக்கு ஆயுள் தண்டனை

2005 ஆம் ஆண்டு அயோத்தியில் நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 18, 2019, 04:30 PM IST
அயோத்தி தீவிரவாத தாக்குதல் வழக்கு: ஒருவர் விடுதலை; 4 பேருக்கு ஆயுள் தண்டனை title=

பிரயாகராஜ்: அயோத்தியில் உள்ள ராம் ஜன்மபூமி வளாகத்தில் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பான வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ர்பில் நான்கு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005-ஆம் ஆண்டு அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலமான ராம ஜென்ம பூமி, பாபர் மசூதி அமைத்துள்ள பாதுகாப்பு நிறைந்த வளாகத்திற்குள் நுழைந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு மற்றும் வெடி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகளுக்கிடையே சண்டை நடந்தது. இதில் தீவிரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர். அதேவேளையில் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதனா வழக்கு பிரயாகராஜ் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்ற வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேரில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவர் விடுவிக்கப்பட்டார். 

Trending News