புதுடில்லி: டெல்லி திலக் பாலம் ரயில் நிலையத்தில் தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருவதால் டெல்லி - பல்வால் - ஆக்ரா பாதையில் செல்லும் 12 மின்தன்னுந்து ரயில்கள் (Electric multiple unit (EMU)) இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஜூலை 21 வரை இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மூன்று நாட்களுக்கு 12 மின்தன்னுந்து ரயில்கள் ரத்து செய்யப்படுவதால், தினசரி ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு சிரமம் ஏற்படும். இது தவிர, சில ரயில்கள் வேறு பாதையில் இயக்கப்படும் என்றும் அறிவிகப்பட்டு உள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரயில்கள்:
64053 பல்வால் - காஜியாபாத் செல்லும் ரயில்
64491-64492 பல்வால் - புது தில்லி செல்லும் ரயில்,
64493-64494 நிஜாமுதீன் - பல்வால் செல்லும் ரயில்,
64569-64570 கோசி கலன் - நிஜாமுதீன் செல்லும் ரயில்,
64071 பல்லப்கர் - சகுர்பஸ்தி செல்லும் ரயில்
64075-64077 மற்றும் 64078-64080 பல்வால் - புது தில்லி ரயில் ரத்து செய்யப்படும்.
மாற்று வழியில் செல்லு ரயில்கள் விவரம்:
காஜியாபாத் - கோசி செல்லும் ரயில்கள் சாஹிபாபாத், நிஜாமுதீன் வழியாக காஜியாபாத் செல்லும்,
மதுரா - காசியாபாத் ரயில் சாஹிபாபாத் நிஜாமுதீன் வழியாக காஜியாபாத் செல்லும்,
பல்வால் - குருக்ஷேத்ரா நிஜாமுதீன் ரயில் நிலையம் வரை மட்டும் செல்லும்.
பல்வால் - காசியாபாத் செல்லும் ரயில் நிஜாமுதீனில் இருந்து காஜியாபாத் வழியாக சாஹிபாபாத் செல்லும்.
பல்வால் - புது தில்லி- தண்ட்லா ரயில் பல்வாலில் இருந்து சாஹிபாபாத், நிஜாமுதீன் வழியாக தண்ட்லாவுக்குச் செல்லும்.