வட இந்தியாவில் பனி மூட்டம்: டெல்லி செல்லும் 10 ரயில்கள் தாமதம்!

வட இந்தியாவின் பல பகுதிகளில் மூடுபனி மற்றும் பார்வை குறைவாக இருப்பதால் டெல்லி செல்லும் குறைந்தது 10 ரயில்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகிவிட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

Last Updated : Feb 4, 2020, 08:33 AM IST
வட இந்தியாவில் பனி மூட்டம்: டெல்லி செல்லும் 10 ரயில்கள் தாமதம்! title=

வட இந்தியாவின் பல பகுதிகளில் மூடுபனி மற்றும் பார்வை குறைவாக இருப்பதால் டெல்லி செல்லும் குறைந்தது 10 ரயில்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகிவிட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

வட மாநிலங்களில் கடும் குளிருடன் பனிமூட்டமும் நிலவுகிறது. இதனால் காட்சித் திறன் குறைந்து, டெல்லி நோக்கி வரும் ரயில்கள் சுமார் 6 மணி நேரம் வரை தாமதமாக ஓடுவதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் கூறினர். மேலும் இன்று அதிகாலையில் பனி மூட்டம் அதிகமாக இருப்பதாலும், மற்றும் தண்டவாளம் சரியாக தெரியாத காரணத்தினாலும் ரயில்கள் வழக்கத்தைவிட மெதுவான வேகத்தில் இயங்கி வருவதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தலைநகர் டெல்லியில் மோசமான வானிலை காரணமாக ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் குளிர் அலை நிலைகள் நிலவும், ஒடிசா கடும் மூடுபனியில் மூழ்கும் என்று வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது. 

வடக்கு ரயில்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, வாஸ்கோ-நிஜாமுதீன் கோவா எக்ஸ்பிரஸ் 3:45 மணி நேரம் தாமதமானது, பூரி-புது டெல்லி புர்ஷோட்டம் எக்ஸ்பிரஸ் 3 மணி நேரம் தாமதமானது. திப்ருகார்-டெல்லி பிரம்முத்ரா மெயில் மற்றும் ஹவுரா-நியூ பூர்வா எக்ஸ்பிரஸ் தலா 2 மணி நேரம் தாமதமானது.

பைசாபாத்-டெல்லி பைசாபாத் எக்ஸ்பிரஸ் மற்றும் ஸ்ரீ கங்காநகர் உதயன் அபா டூபன் எக்ஸ்பிரஸ் ஆகியவை தலா 1:30 மணி நேரம் தாமதமாக இயங்குகின்றன.

ஹவுரா-புது டெல்லி துரான்டோ எக்ஸ்பிரஸ், பாகல்பூர்-ஆனந்த்விஹர் விக்ரம்ஷிலா எக்ஸ்பிரஸ், ராஜேந்திர நகர்-புது டெல்லி சம்பூர்ணா கிரந்தி மற்றும் ஹவுரா-ஜெய்சால்மர் எக்ஸ்பிரஸ் ஆகியவை ஒரு மணி நேரம் தாமதமாக இயங்குகின்றது.

Trending News