புதுடெல்லி: டெல்லி IIT விடுதியரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவரின் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது!
புதுடெல்லி IIT-ல் முதுகலை வேதியியல் பிரிவில் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவர் கோபால் மாலோ(21). மேற்கு வங்களத்தை சேர்ந்த சமட் மாலோ என்பவரின் மகனான இவர் டெல்லி IIT நீல்கிரி விடுதியில் தங்கி பயின்று வருகின்றார்.
நேற்று காலை இவரது அரையில் இருக்கும் விசிறியில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். முன்னதாக கடந்த 10-ஆம் தேதி தூக்க மாத்திரை உண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்., பின்னர் சப்தர்ஜூங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இவர் காப்பாற்றப்பட்டார்.
இதனையடுத்து அவரது சகோதரர் பாட்சோ இவருடன் விடுதியில் தங்கி அவரை பார்த்துக்கொண்டார், எனினும் தற்போது மீண்டும் தற்கொலை முயற்சி செய்து உயிரிழந்துள்ளார். இதுவரையிலும் இவரது தற்கொலைக்கான காரணம் மர்மமாகவே இருந்த நிலையில் தற்போது அவரது அறையில் இருந்து கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
பெங்காளியில் எழுதப்பட்டிருந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது., இதற்கு முன்னதாக இவர் கொல்கத்தாவில் இளங்கலை பயில்கையில் பாலியல் ரீதியாக துன்புருத்தப் பட்டதாகவும், அந்த மன உலைச்சலால் தான் இதுநாள் வரை தற்கொலைக்கு தொடர்ந்து முயன்று வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இதே மாதத்தின் முற்பகுதியில் மற்றொரு மாணவர் இதே IIT விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது குறிப்பிட்டத்தக்கது!