மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் ‘மென்சுரல் கப்’ பற்றி தெரியுமா?

மாதவிடாயின்போது மென்ஸ்ட்ரூவல் கப் பயன்படுத்துவது எப்படி? என்பது பற்றிய ஒரு தொகுப்பு..! 

Last Updated : Apr 6, 2018, 01:39 PM IST
மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் ‘மென்சுரல் கப்’ பற்றி தெரியுமா? title=

தற்போது மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கினுக்கு பதிலாக வந்துள்ளது மென்சுரல் கப். ஒரு மாதத்துக்கு நாப்கின் செலவு குறைந்தது 50 ரூபாயாவது ஆகும் அல்லவா?. அப்படியென்றாலும் ஒரு வருடத்துக்கு சுமார் 600 ரூபாயாவது செலவாகும். இதுவே, 10 வருடங்களுக்கு மொத்தமே 6000 ரூபாய் என்றால், குறைவு தானே. 

ஆனால், மாதவிடாய் சமயங்களில் நாப்கினுக்கு பதிலாக மென்சுரல் கப் தற்போது அறிமுகமாகியுள்ளது. இந்த மென்சுரல் கப் விலை 2000 ரூபாய்கே கிடைக்கிறது. என்னடா இது நாப்கினை விட அதிக பணமா இருக்கேன்னு பாக்குறிங்களா?. ஆனால் இந்த கப்பை நீங்க ஒரு முறை வாங்கிட்டா சுமார் 10 வருடங்களுக்கு இந்த கப்பை பயன்படுத்தவும் முடியும். 

இதை, பெண்கள் பயன்படுத்துவதற்கான வழி முறைகளைப் பற்றி முகநூலில் விழிப்புணர்வு வீடியோக்களை பலருண் பகிர்ந்து வருகின்றனர்.

இதை எப்படி பயன் படுத்துவது என்பது பற்றி பார்கலாம்...! 

மென்சுரல் கப்:

சிலிக்கானால் தயாரிக்கப்பட்ட மென்சுரல் கப்பானது மாதவிடாய் நேரத்தில் பெண்கள் நாப்கினுக்கு பதில் பயன்படுத்தக்கூடிய சிறிய வகை கப். 

இந்த மென்சுரல் கப்-பை பயன்படுத்தும் பொது 4 முதல் 12 மணி நேரத்திற்குள் அகற்றி அதை சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம்.

மென்சுரல் கப்-ஆல் என்ன பயன்: 

நாப்கினால் சுற்றுச்சூழல் மாசடைய வாய்ப்புள்ளது. அனால், இந்த மென்சுரல்-கப் பயன்படுத்துவதால் நிச்சயம் சுகாதாரக் கேடு ஏற்படாது.

மழையில் நனையும் போது நாப்கின் நனைந்துவிடுமோ என்ற அச்சம் அனைவரின் மனதிலும் இருக்கும். ஆனால், இந்த கப்பை பயன்படுத்துவதால் அப்பாடி பயப்படவும் தேவை இல்லை. 

மென்சுரல் கப்பை எப்படி பயன்படுத்துவது...! 

இதை பெண்ணுறுப்பின் வழியே மென்சுரல் கப்பின் மேற்பரப்பை, கைகளால் சுருக்கி உட்புறமாக வைக்கவும்.

பெண்ணுறுப்பின் வழியே வைத்தவுடன் அந்த கப் தானாகவே விரிந்து ஒரு கப் போல கருப்பைக் குழாய்க்கு வெளிப்புறத்தில் அதை சூழ்ந்துக் கொள்ளும். உடலினுள் சென்று விடுமோ என்ற அச்சம் தேவை இல்லை. இது முழுக்க முழுக்க பாதுகபானது. 

இந்த கப்பை அதிகபட்சம் 12 மணி நேரத்துக்குப் பிறகு இதை நீக்கி சுத்தம் செய்வது அவசியம். மாதவிடாய் நிகழும் நாட்கள் முழுக்க இதே போல செய்யலாம். 

இந்த கப்பை சுடுதண்ணீரில் இட்டு சுத்தம் செய்து மீதும் பயண படுத்தலாம்.

இதனால் பக்கவிளைவு ஏதாவது....! 

பக்கவிளைவுகள் ஏதும் வரும் வாய்புகள் இல்லை.சிலிக்கான் அலர்ஜி உள்ளவர்களுக்கு இது பொருந்தவே பொருந்தாது. அதனால் பயன்படுத்த நினைப்பவர்கள் முன்கூட்டியே மருத்துவரை ஆலோசித்து உபயோகிப்பது நல்லது.

சுகாதாரமான முறையில் சுத்தம் செய்யாவிட்டால் கிருமித் தொற்று ஏற்படலாம்.எந்த ஒரு மருத்துவ கண்டுப்பிடிப்பும் தனிநபரின் உடல் சார்ந்து தான். எனவே, அதன் பயன்களும் பக்க விளைவுகளும் பெரிய அளவில் இல்லை என்றாலும் சிறிய அளவில் இருக்கலாம். 

இந்த மென்சுரல் கப் பெண்களின் உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படாத பட்சத்தில் கண்டிப்பாக இது பயனுள்ளதாக அமையும்.

வீடியோ: 

video Courtesy : ANICarthik Sekar (facebook).

Trending News