உலக பொது சுகாதார நெருக்கடி ஜிகா வைரசால் இல்லை

ஜிகா வைரஸ் வேகமாக பரவிவந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம், உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அவசர நிலையை அறிவித்தது.

Last Updated : Nov 19, 2016, 05:06 PM IST
உலக பொது சுகாதார நெருக்கடி ஜிகா வைரசால் இல்லை title=

ஜெனீவா: ஜிகா வைரஸ் வேகமாக பரவிவந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம், உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அவசர நிலையை அறிவித்தது.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஜிகா வைரஸ் ஏற்படுத்தியது. கர்ப்பம் பெண்களை ஜிகா வைரஸ் தாக்கினால், பிறக்கக்கூடிய குழந்தைகள் பிறவிக்குறைபாடுகளை கொண்டிருக்கும். குறிப்பாக தலை சிறியதாக இருக்கும், மூளை பகுதியில் பாதிப்பு இருக்கும். உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அவசர நிலையையும் பிறப்பித்தது.

கடந்த 8 மாதங்களாக ஜிகா வைரஸ் பாதிப்பிற்காக அவசர நிலைப் பிரகடனம் நிலுவையில் இருந்து வந்தது. 

இந்நிலையில், ஜிகா வைரஸ் மீதான அவசர நிலைப் பிரகடனத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக உலக சுகாதர நிறுவனம் நேற்று அறிவித்தது.

ஜிகா வைரஸ் மற்றும் அதனோடு கூடிய பின் விளைவுகள் மக்கள் உடல் நலத்திற்கு நீண்ட காலம் அச்சுறுத்தலாக இருக்கும். அதனால், ஜிகா வைரஸ்-க்கு எதிரான வலுவான நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்துள்ளது.

Trending News