பழங்காலத்தில் வெள்ளை முடி என்பது முதுமையின் அடையாளமாக கருதப்பட்டது, ஆனால் இன்றைய காலகட்டத்தில் 30 வயதிலேயே முடி நரைத்துவிடுகுறது. இதற்கு முக்கிய காரணம் இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் ஆகும். இது தவிர அதிக டென்ஷன் மற்றும் மோசமான நீர் போன்றவறால் வெள்ளை முடி வர ஆரம்பித்து விடுகிறது. இப்பிரச்சனையைத் தவிர்க்க, இளைஞர்கள் சில தவறான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். குறிப்பாக வெள்ளை முடிக்கு வண்ணம் பூசத் தொடங்குவது, அவற்றை பிடுங்குவது போன்றவற்றை.
வெள்ளை முடியை பிடுங்குவது சரியா?
சிறு வயதிலேயே தலையில் வெள்ளை முடி தோன்றினால், அதை பிடுங்கி வீசுகின்றனர் இன்றைய இளைஞர்கள். பலர் இதை தவறு என்று கூறுகின்றனர். ஆனால் சிலர் இதை ஒரு கட்டுக்கதை என்கின்றனர். எனவே வெள்ளை முடி என்பது, வயது, பரம்பரை குறைபாடு, மன அழுத்தம், முறையற்ற பராமரிப்பு காரணமாக உருவாகின்றதாம். ஒரு மயிர்காலுக்கு ஒரு வேர் தான் இருக்கும். வெள்ளை முடியைப் பிடுங்குவதால், முடிகளின் எண்ணிக்கையில் ஒன்று குறையுமே தவிர, அது மற்ற கருப்பு முடிகளை வெள்ளையாக்காது. அதனால் ஒரு வெள்ளை முடி, இன்னொரு கருப்பு முடியில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
மேலும் படிக்க | Vitamin D பற்றாக்குறை கொரோனா நோயாளிகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
வெள்ளை முடி ஏன் ஏற்படுகிறது
பொதுவாக நரைமுடி வருவதற்கு மருத்துவரீதியாக முன்மையான காரணம் என்னவென்றால், முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது தான். இந்த மெலனினானது வயதாக ஆகத் தான் குறைய ஆரம்பிக்கும். ஆனால் தற்போது இந்த மெலனின் சிறு வயதினருக்கே குறைய ஆரம்பித்து நரைமுடியை ஏற்படுத்திவிடுகிறது.
வெள்ளை முடியை கருப்பாக்க வீட்டு வைத்தியம்
காஃபின் உட்கொள்ளலைக் குறைக்கவும்
வெள்ளை முடி ஆரம்பிக்கும் போது, காஃபின் உள்ள பொருட்களை உட்கொள்வதை குறைக்கவும். இது தவிர ஃபோலிக் அமிலம் நிறைந்த பொருட்களை சாப்பிடுங்கள். கிரீன் டீயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மருதாணியை பயன்படுத்தவும்
வெள்ளை முடியை தடுக்க மருதாணியை பயன்படுத்தவும். இது உங்கள் தலைமுடிக்கு இயற்கையான பளபளப்பைக் கொடுக்கும். தொடர்ந்து தடவினால், முடி பளபளப்பாகும்.
எண்ணெய் சார்ந்த நிறத்தைப் பயன்படுத்தவும்
வெள்ளை முடிக்கு சாயம் பூசுவதன் மூலம், அவற்றின் இயற்கையான நிறம் போய்விடும். உங்கள் முடி நிறத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, எண்ணெய் அடிப்படையிலான முடி நிறம் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR