நிலவேம்புக் குடிநீரின் அளவு எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பார்ப்போம்

Last Updated : Oct 4, 2017, 04:24 PM IST
நிலவேம்புக் குடிநீரின் அளவு எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பார்ப்போம் title=

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவ்வளவு நிலவேம்பு குடிநீர் பருகலாம் என்று தெரிந்துக் கொள்வோம் 

திடீரென பன்றிக் காய்ச்சல், டோங்கு காய்ச்சல் என்று தெரியும் பொது நாம் பயப்பட தேவையில்லை. அதற்கு மருந்து உண்டு அதுதான் நிலவேம்பு காசாயம் இதை குழந்தைகள், பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் உட்கொள்ளலாம். வேறு மருந்து, மாத்திரைகளைச் சாப்பிடும்போது இந்த நிலவேம்புக் குடிநீரை அருந்தினால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுவிடுமே என்று பயப்படத் தேவையில்லை. எந்தப் பாதிப்பும் ஏற்படாது, நிலவேம்புக் குடிநீரை எவ்வளவு அளவு எடுத்துக் கொள்லாம் என்று பார்ப்போம் 

# 12 மாதத்திற்குட்பட்ட குழந்தைகளுக்கு 2.5 மி.லி முதல் 5 மி.லி. வரை வழங்க வேண்டும். 

# 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு 5 மி.லி. முதல் 7.5 மி.லி நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும். 

# 3 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு 5 மி.லி முதல் 7.5 மி.லி. வரை அளவு மட்டுமே அளிக்க வேண்டும். 

# 5 முதல் 12 வயது வரையிலான சிறார்களுக்கு 7.5 மி.லி முதல் 15 மி.லி. நிலவேம்பு குடிநீர் அளிக்கலாம். 

# 13 வயது முதல் 19 வயது வரையுள்ளவர்களுக்கு 15 மி.லி முதல் 30 மி.லி. வரை வழங்கலாம். 

# 19 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 30 முதல் 60 மி.லி நிலவேம்பு கசாயம் அருந்தலாம்.  

# மகப்பேறு அடைந்த தாய்மார்கள் 15மி.லி முதல் 30 மி.லி. வரை குடிக்கலாம். 

# பால் கொடுக்கும் தாய்மார்கள் 30 முதல் 60 மி.லி நிலவேம்பு குடிநீர் பருகலாம். 

உணவு சாப்பிடுவதற்கு முன்பு நாளொன்றுக்கு இரு வேளை நிலவேம்பு குடிநீர் அருந்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Trending News