ஒல்லியா இருக்கிற நீங்கள் சட்டுனு எடை கூடனுமா? இதோ உங்களுக்கான உணவு பட்டியல்

ஒல்லியாக இருக்கிறோமே, சீக்கிரமா உடல் எடையை கூட்டணும் என நீங்கள் நினைத்தால், உங்களுக்கான உணவுப் பட்டியல் இங்கே இருக்கிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 20, 2023, 05:58 PM IST
  • உடல் எடையை அதிகரிக்கும் உணவுகள்
  • இந்த உணவுகளை சாப்பிட்டால் எடை கூடும்
  • திட்டமிட்டு உணவு பட்டியலை சாப்பிடுங்கள்
ஒல்லியா இருக்கிற நீங்கள் சட்டுனு எடை கூடனுமா? இதோ உங்களுக்கான உணவு பட்டியல் title=

நமது உடலில் உள்ள தசைகள் வளரும் போது தான் நமது உடல் எடை அதிகரிக்கும். உடல் எடையை அதிகரிக்க விரும்புவோர்கள் உடல் தசைகளின் வளர்ச்சியை அதிகரிக்க கூடிய உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். உடல் தசைகளின் வளர்ச்சி அதிகரிக்க மிக முக்கியமான ஊட்ட சத்துக்களாக விளங்குபவை. புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் உள்ளிட்டவற்றை கொண்ட உணவுகள் வேகமாக உடல் எடையை அதிகரிக்க உதவும். அந்தவகையில் உடல் எடையை அதிகரிக்கும் உணவுகளை இங்கே பார்க்கலாம். 

பால்
உடல் எடையை அதிகரிப்பதில் பாலிற்கு முக்கிய பங்கு உள்ளது. பாலில் புரதம், கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்திருப்பதுடன் கல்சியம் மற்றும் மற்றும் விட்டமின்களும் உள்ளன. தசை வளர்சிக்கு பால் சிறந்த உணவாக இருப்பதுடன் உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்களையும் வழங்குகிறது.

வாழைப்பழம்

வாழைப்பழம் உடல் எடையை வேகமாக அதிகரிக்கும். வேகமாக உடல் எடையை அதிகரிக்க விரும்புவோர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது சிறந்த பலனை தரும். வாழைப்பழத்தில் விட்டமின்கள், கால்சியம் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்து இருக்கின்றது.

மேலும் படிக்க | 40+ வயதாவிட்டதா... என்றும் இளமையாக இருக்க ‘இவற்றை’ உணவில் சேர்க்கவும்!

அவகோடா

பழங்களில் அவகோடா உடல் எடையை அதிகரிப்பதற்கு சிறந்த பழமாக விளங்குகின்றது. மற்றைய பழங்களை இதில் உடல் எடையை அதிகரிப்பதற்கான சத்துக்களை அதிகம் நிறைந்துள்ளது.அவகோடாவில் விட்டமின்கள் தாதுக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன.

உலர் திராட்சை

உலர்ந்த திராட்சை பழங்களில் உள்ள சத்துக்கள் எலும்புகள் வலுப்பெற, இரத்த விருத்திக்கு, மலசிக்கல் நீங்க என பல வியாதிகளுக்கு மருந்தாக அமைகின்றது.உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் பாலில் உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிடுவதன் மூலம் நல்ல பலனை அடைய முடியும்.

மீன்
கடல் உணவுகளில் மீன் உடல் எடையை அதிகரிப்பதில் முக்கியமான உணவாக விளங்குகின்றது. மீன் உடலுக்கு மிக ஆரோக்கியமான உணவாகவும் இலகுவாக கிடைக்க கூடிய உணவாகவும் உள்ளது. உடல் எடை அதிகரிக்க விரும்புவோர் உணவில் மீன்களை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இறால்

மற்றொரு கடல் உணவான இறால் வகை உணவுகளும் உடல் எடையை அதிகரிக்க உதவியாக இருக்கும்.

கோழி இறைச்சி

சிவப்பு இறைச்சி வகைகளில் ஒன்றான கோழி இறைச்சியில் புரத சத்து அதிகமாக நிறைந்திருக்கின்றது. உடல் எடையை வேகமாக அதிகரிப்பதில் கோழி இறைச்சியும் முக்கிய உணவாக திகழ்கிறது.

முட்டை

முட்டையில் அதிகமான ஊட்ட சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. உடலுக்கு மிக ஆரோக்கியமான உணவு ஒன்று தான் முட்டை. முட்டையில் நிறைந்துள்ள சத்துக்கள் உடல் எடையை அதிகரிப்பதற்கு உதவியாக இருக்கும். சிறந்த சத்துக்கள் நிறைந்த உணவான முட்டையை தினமும் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கும்.

பீன்ஸ்

பீன்ஸ் புரோட்டின், நார்ச்சத்து, விட்டமின்கள், கனிம சத்துக்கள் என பல ஊட்ட சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. இந்த பீன்ஸ் உடல் எடையை அதிகரிக்க உதவுவதுடன் உடலை ஆரோக்கியாக வைத்துக்கொள்ளவும் உதவுகின்றது.

உருளைக்கிழங்கு

நம் உணவு பழக்கத்தில் உருளைக்கிழங்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் உணவுகளில் ஒன்றாகும். இதில் விட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார் சத்துக்கள் நிறைந்துள்ளன.

பாதம்

பாதம் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவாகும். இதில் விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது உடல் எடையை வேகமாக அதிகரிப்பதுடன் கெட்ட கொலஸ்ட்ரோலை குறைக்கவும் உதவுகின்றது.

பேரிச்சம்பழம்

தினமும் இரண்டு பேரிச்சம் பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் கிடைப்பதுடன் உடல் எடையை அதிகரிக்கவும் உதவும்.

மேலும் படிக்க | எலும்பை பலவீனப்படுத்தும் இந்த உணவுகளை தொடவே தொடதீர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News