COVID-19: கொரோனா சிகிச்சை பணியில் முன்னாள் ராணுவ மருத்துவர்களை ஈடுபடுத்த முடிவு

இந்தியா தற்போது கொடிய கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளை எதிர்த்துப் போராடுகிறது. 3 லட்சத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 9, 2021, 11:24 PM IST
  • இந்தியா தற்போது கொடிய கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளை எதிர்த்துப் போராடுகிறது.
  • 4 லட்சத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகின்றன.
COVID-19: கொரோனா சிகிச்சை பணியில் முன்னாள் ராணுவ மருத்துவர்களை ஈடுபடுத்த முடிவு  title=

இந்தியா தற்போது கொடிய கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளை எதிர்த்துப் போராடுகிறது. 4 லட்சத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகின்றன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 4 லட்சத்திற்கும் அதிகமான பேர்களுக்கு புதிதாக கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா (Corona) நெருக்கடியை சமாளிக்க நூற்றுக்கணக்கான முன்னாள் இராணுவ மருத்துவர்கள் , கொரோனா சிகிச்சையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

சுமார் 400 மருத்துவ அதிகாரிகள் அதிகபட்சம் 11 மாதங்கள் ஒப்பந்தத்தில் பணியாற்றுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராணுவத்தில் பணியாற்றிய மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும் மருத்துவ ஆலோசனை பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவார்கள் என  அமைச்சரவையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.தொற்றுநோயின் இரண்டாவது அலையைச் சமாளிக்க ஆயுதப்படைகள் வரும் வாரங்களில் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

COVID தொடர்பான அனைத்து பணிகள் தொடர்பாக,  சிவில் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட, இராணுவம் ஏற்கனவே ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவை இராணுவ துணைத் தலைவர் நேரடியாக கண்காணிக்கிறார்.

ALSO READ | கொரோனா நோயாளிகள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் Prone Positioning

சிவில் அதிகாரிகளுக்கு உதவுவதற்காக இராணுவம் இதுவரை கணிசமான மருத்துவ வளங்களை பயன்படுத்தியுள்ளது. டெல்லி, அகமதாபாத், லக்னோ, வாரணாசி மற்றும் பாட்னா ஆகிய ஐந்து இடங்களில் கோவிட் மருத்துவமனைகளை நிறுவுகிறது. 

சிறிது நாட்களுக்கு முன், கோவிட் -19 நெருக்கடியை சமாளிக்க போதுமான மருத்துவ பணியாளர்களை ஈடுபடுத்துவது குறித்து பிரதமர் மோடி மறுஆய்வு செய்தார். கொடிய வைரஸை எதிர்த்துப் போராட மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முக்கிய முடிவுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் (PMO) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | GOOD NEWS! DRDO-வின் 2-deoxy-D-glucose கொரோனா மருந்தின் பயன்பாட்டிற்கு DCGI ஒப்புதல்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News