கொரோனாவின் புதிய மாறுபாடு XE வகையின் முக்கிய அறிகுறிகள் இவைதான்: ஜாக்கிரதை

XE Variant: கொரோனாவின் புதிய மாறுபாடு எக்ஸ்இ ஆனது ஓமிக்ரானின் துணை மாறுபாடான பிஏ.2 ஐ விட 10 சதவிகிதம் அதிகமாக பரவக்கூடியதாக இருப்பதாக கூறப்படுகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 12, 2022, 06:54 PM IST
  • கொரோனா தொற்று இன்னும் ஓயவில்லை.
  • உலகம் முழுவதும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வருகிறது.
  • உலக சுகாதார அமைப்பு, XE என்ற புதிய மாறுபாட்டை உறுதி செய்துள்ளது.
கொரோனாவின் புதிய மாறுபாடு XE வகையின் முக்கிய அறிகுறிகள் இவைதான்: ஜாக்கிரதை title=

கொரோனா தொற்று இன்னும் ஓயவில்லை. உலகம் முழுவதும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வருகிறது. அவ்வப்போது கொரோனாவின் புதிய வகைகள் வெளிவருகின்றன. சமீபத்தில், கொரோனாவின் புதிய வகை ஓமிக்ரான் தொற்று உலகம் முழுதும் பரவியது. ஓமிக்ரான் மிக வேகமாக பரவியது, எனினும் இதன் தீவிரத்தன்மை குறைவாகவே இருந்தது. 

தற்போது மீண்டும் ஒருமுறை கொரோனாவின் புதிய மாறுபாடு குறித்து சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது. கொரோனாவின் புதிய வகை பி.ஏ2. இது எக்ஸ்இ வேரியண்ட் என அழைக்கப்படுகிறது. கொரோனாவின் புதிய மாறுபாடு குறித்து சுகாதாரத் துறைகளின் கவலை அதிகரித்துள்ளது. 

WHO அதாவது உலக சுகாதார அமைப்பு, XE என்ற புதிய மாறுபாட்டை உறுதி செய்துள்ளது. மும்பையில் எக்ஸ்இ மாறுபாடு சில நோயாளிகளிடம் காணப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இது சுகாதாரத் துறையால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

தரவுகளின்படி, கொரோனாவின் புதிய மாறுபாடு எக்ஸ்இ ஆனது ஓமிக்ரானின் துணை மாறுபாடான பிஏ.2 ஐ விட 10 சதவிகிதம் அதிகமாக பரவக்கூடியதாக இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், புதிய மாறுபாடு எவ்வளவு ஆபத்தானதாக இருக்கும் என்று தற்போது சொல்வது கடினம். 

கொரோனாவின் அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடும். இருப்பினும், புதிய எக்ஸ்இ மாறுபாட்டின் அம்சங்கள் என்ன என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இந்த விழிப்புணர்வு இருந்தால், தொற்றால் பாதிக்கப்படுவதை தவிர்க்கலாம்.

மேலும் படிக்க | Covid Variant XE: கொரோனாவின் புதிய வகை மாறுபாடு இந்தியாவில் அடி எடுத்து வைத்தது 

கொரோனா எக்ஸ்இ வகை தொற்றின் பொதுவான அறிகுறிகள்

- நரம்புத் தளர்ச்சி

- காய்ச்சல்

- ஹைபோக்ஸியா

- தூக்கம் அல்லது மயக்கத்தில் உளறுவது 

- ப்ரைன் ஃபாக்

- மன குழப்பம்

- குரல் தண்டு நரம்பியல் பிரச்சனைகள்

- உயர் இதய துடிப்பு

- தோலில் கொப்பளங்கள் அல்லது நிறம் மாறுதல்

- வாசனை மற்றும் சுவை தெரியாமல் இருப்பது.

உங்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் மற்றும் இருமல் இருந்தால், உங்களுக்கு கோவிட் இருக்கலாம். ZOE கோவிட் டிராக்கர் செயலியின்படி இந்த புதிய அறிகுறிகள் பதிவாகியுள்ளன. இதில் நோயாளியின் கொரோனா அறிகுறிகள் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று உங்களுக்கும் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

இங்கிலாந்தில் புதிய மாறுபாடு கண்டறியப்பட்டது

உலகம் முழுவதும் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. முன்னர் வெளிவந்த பல மாறுபாடுகளும்  ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பரவுவதில் அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. இப்போது புதிய எக்ஸ்இ வகை தொற்று பற்றி லண்டனில் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு சுமார் 637 பேர் புதிய மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் இந்த புதிய மாறுபாடு மிக வேகமாக பரவி வருகிறது. ஆகையால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Corona XE Variant: மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News