புதுடெல்லி: கொரோனா தொற்றுநோய் அதிகரித்து வரும் அச்சத்திற்கு மத்தியில் ஒரு நிம்மதியளிக்கும் செய்தி வெளிவந்துள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, தடுப்பு மருந்தின் அனைத்து செலவுகளையும் மோடி அரசு ஏற்கக்கூடும் என தெரிய வந்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். பிப்ரவரி மாத இறுதியில் இருந்து தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று நம்பப்படுகிறது.
ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
கொரோனா வைரஸின் (Corona Virus) அதிகரித்து வரும் தொற்றின் அளவு குறித்து மத்திய அரசு தீவிரமாக யோசித்து வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்த தன்னாலான அனைத்தையும் அரசாங்கம் செய்து வருகிறது. இந்த வரிசையில், தடுப்பு மருந்துக்கான முழு செலவையும் அரசாங்கமே ஏற்கவும் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், அதை பட்ஜெட்டில் அரசாங்கம் அறிவிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
முழு திட்டம் தயாராக உள்ளது
இது தொடர்பாக முழு திட்டத்தையும் அரசாங்கம் தயார் செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின் மதிப்பீடுகளின்படி, நாட்டில் ஒருவருக்கு கொரோனா தடுப்பு மருந்தை (Corona Vaccine) அளிக்க சுமார் 6-7 டாலர் அதாவது 500 ரூபாய்க்கும் மேலாக செலவாகும். 130 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தை வழங்க 500 பில்லியன் ரூபாய்க்கான பட்ஜெட்டை அரசாங்கம் நிர்ணயித்ததற்கு இதுவே காரணம். இந்த பட்ஜெட் நடப்பு நிதியாண்டின் இறுதியில் ஏற்பாடு செய்யப்படும். அதன் பிறகு தடுப்பு மருந்தை ஏற்பாடு செய்வதில் எந்த நிதி பற்றாக்குறையும் இருக்காது.
அனைவருக்கும் கிடைக்கும்
கொரோனா தடுப்பு மருந்து எப்போது வந்தாலும், அது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்படும் என்பதை பிரதமர் மோடி (PM Modi) அவர்கள் ஏற்கனவே தெளிவு படுத்தியுள்ளார். இதிலிருந்து யாரும் விடுபட்டு போகமாட்டார்கள் என்று அவர் கூறினார்.
கொரோனாவின் அதிகரித்து வரும் எண்ணிக்கை பற்றி பேச மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஒரு மெய்நிகர் சந்திப்பையும் நடத்தியுள்ளார். அதே நேரத்தில், கொரோனாவுக்கு (Corona) எதிரான போராட்டத்தில் சிறிதளவு கூட மந்தநிலை இருக்க வேண்டாம் என்று அவர் மாநிலங்களை எச்சரித்தார்.
ALSO READ: ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடையும் COVID Vaccine: திட்டத்துடன் தயாராகிறது அரசு
முதலமைச்சர்களுடனான கலந்துரையாடலின் போது, ஆர்.டி.-பி.சி.ஆர் சோதனையின் விகிதத்தை அதிகரிப்பது குறித்து பிரதமர் வலியுறுத்தினார். மேலும் வீடுகளில் தனிமைப்படுத்தலில் இருக்கும் நோயாளிகளின் கவனிப்பும் சிறப்பாக இருக்க வேண்டும் என்றார் அவர்.
சமீபத்தில், 8 மாநிலங்களின் முதல்வர்களுடனான சந்திப்பில், பிரதமர் மோடி ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டருக்கு கடுமையான முறையில் சில விஷயங்களை புரிய வைத்தார். கட்டர் தனது மாநிலத்தின் கொரோனாவின் புள்ளிவிவரங்களை சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது பிரதமர் அவரை குறுக்கிட்டு, புள்ளிவிவரங்கள் ஏற்கனவே வந்துவிட்டன என்று கூறினார். நீங்கள் கொண்டுள்ள திட்டம் என்ன? கொரோனா வைரஸைத் தடுக்க நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், மேலும் என்ன செய்யப்போகிறீர்கள்? என்று கேட்டார்.
இதற்குப் பிறகு, கட்டர் தனது திட்டத்தை அவருக்கு விளக்கினார். கொரோனாவை நாட்டை விட்டு கூண்டோடு அழிக்க பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) காட்டும் முனைப்பு இப்படி பல வழிகளில் வெளியே கண்கூடாகத் தெரிந்துள்ளது.
ALSO READ: மும்பையை முடக்கிப்போட்ட அந்த 3 நாட்கள்: 26/11 நினைவு நாள்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR