புதுடெல்லி: அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு இடையே, அசோக் கெஹ்லோட் தலைமையிலான ராஜஸ்தான் அரசு 2020 டிசம்பர் 31 வரை கட்டுப்பாட்டு மண்டலங்களில் லாக்டவுனை நீட்டித்துள்ளது. "லாக்டவுன் 2020 வரை டிசம்பர் 31 வரை கட்டுப்பாட்டு மண்டலங்களில் நடைமுறையில் இருக்கும்.
அத்தியாவசிய நடவடிக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். அதுமட்டுமல்ல, மேலும் இந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுக்கள் வீடுதோறும் சென்று கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும்”என்று மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகள், சினிமா, பொழுதுபோக்கு இடங்கள் போன்றவை இந்த ஆண்டு இறுதி வரை மூடப்படும் என்றும் அது அறிவித்தது. சமூக / அரசியல் / விளையாட்டு / கலாச்சார / மத செயல்பாடுகள் மற்றும் பெரிய கூட்டங்களுக்கும் டிசம்பர் 31 வரை தடை விதிக்கப்பட்டுள்ளன.
Read Also | 10 பேரில் 7 பேர் தொடர்ந்து முகமூடி அணிந்தால் கொரோனாவை நிறுத்தலாம்: ஆய்வு
இவற்றைத் தவிர, டிசம்பர் 1 முதல் 31 வரை எட்டு மாவட்ட தலைமையகங்களின் நகர்ப்புற எல்லைக்குள் இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கோட்டா, ஜெய்ப்பூர், ஜோத்பூர், பிகானேர், உதய்பூர், அஜ்மீர், பில்வாரா, நாகூர், பாலி, டோங்க், சிகார் மற்றும் கங்கநகர் மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பிரிவு 144 ஐ விதிக்க ராஜஸ்தான் அரசு முடிவு செய்திருந்தது. கொரோனா தொற்று சங்கிலியை உடைப்பதற்காக அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அதோடு, முகக்கவசம் அணியாததற்கு விதிக்கப்பட்ட அபராதம் 200 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
Also Read | Coronaவை கட்டுப்படுத்த புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்த நாடு எது தெரியுமா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR