மாம்பழம் சாப்பிட்ட பின் எடுத்துக் கொள்ளக் கூடாத 5 உணவுகள்

தற்போது மாம்பழ சீசன் தொடங்கி விட்ட நிலையில், மாம்பழத்தை உட்கொண்ட உடன் தவிர்க்க வேண்டிய உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 27, 2021, 02:43 PM IST
  • மாம்பழம் படிக்காதவர்கள் என யாரும் இருக்க முடியாது.
  • இந்தியாவில் அதிக அளவில் மாம்பழம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
  • அதிலும், மல்கோவா மாம்பழம், இமாம் பசந்த் போன்ற மாம்பழங்களின் சுவைக்கு ஈடு இணை இல்லை.
மாம்பழம் சாப்பிட்ட பின் எடுத்துக் கொள்ளக் கூடாத 5 உணவுகள் title=

கோடைகாலம் என்றால், உடனே அனல் பறக்கும் வெயிலையும் தாண்டி நம் நினைவுக்கு வருவது மாம்பழம்.  மாம்பழம் படிக்காதவர்கள் என யாரும் இருக்க முடியாது.  இந்தியாவில் அதிக அளவில் மாம்பழம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதிலும், மல்கோவா மாம்பழம், இமாம் பசந்த் போன்ற மாம்பழங்களின் சுவைக்கு ஈடு இணை இல்லை. 

மாம்பழங்கள்  பழமாக சாப்பிடுவதோடு, குளிர் பானங்களாகவும்,  மில்க் ஷேக் ஜூஸ் என பிற வழிகளிலும் சாப்பிடும் பழக்கம் உள்ளது. மாம்பழம் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன, ஆனால் மாம்பழத்தை சில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவது, அல்லது மாம்பழத்துடன் சாப்பிடுவது,  உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இங்கே, மாம்பழங்களுடன் சேர்ந்து உண்பதை தவிர்க்க வேண்டிய  5 உணவுப் பொருட்களை பற்றி அறிந்து கொள்ளலாம்
நீர்: மாம்பழம் சாப்பிட்ட பிறகு உடனேயா தண்ணீரை அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். மாம்பழங்களை உட்கொண்ட உடனேயே தண்ணீரைப் பருகுவது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் வயிற்று வலி, அமிலத்தன்மை ஆகியவை ஏற்படலாம். மாம்பழம் சாப்பிட்ட அரை மணி நேரத்திற்குப் பிறகு நீங்கள் தண்ணீரைப் பருகலாம்.

தயிர்: நறுக்கிய மாம்பழங்களுடன் தயிர் ஒரு கிண்ணம் சாப்பிடும் பழக்கம் சிலருக்கு உள்ளது. இருப்பினும்,  சூட்டை தரும் மாம்பழத்துடன், குளிர்ச்சியை ஏற்படும் தயிரை உட்கொள்வதால், தோல் பிரச்சினைகள், உடலில் நச்சுகள் சேருதல், ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் என்பதால் இதை நீங்கள் தவிர்க்க வேண்டும்.

கசப்பு: மாம்பழம் சாப்பிட்ட உடனேயே கசப்பான உணவுகளை தவிர்க்க வேண்டும்.இதனால்,  குமட்டல், வாந்தி மற்றும் சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

ALSO READ | உணவில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் சுவையை கூட்டும் உப்பு..!!

காரமான உணவு: மாம்பழம் சாப்பிட்ட பிறகு காரமான அல்லது மிளகாய் அதிகம் உள்ள உணவை உட்கொள்வது வயிற்று பிரச்சினைகளை ஏற்படுத்தும் மற்றும் உங்கள் சருமத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது முகப்பரு ஏற்படவும் வழிவகுக்கும்.

குளிர் பானம்: குளிர்ந்த பானங்களுடன் மாம்பழம் சாப்பிடுவதும் தீங்கு விளைவிக்கும். மாம்பழத்தில் சர்க்கரை அதிகம் உள்ளது. குளிர் பானங்களிலும் சர்க்கரை அதிகம் உள்ளது. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

ALSO READ | உணவே மருந்து: பல உடல் பிரச்சனைகளுக்கு தீர்வாகும் தயிர்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News