புதுடில்லி: தற்போது உலகை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரசால் (Corona Virus) மக்கள் சுத்தம் சுகாதாரம் பற்றிய விஷயங்களை மிக தீவிரமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். வீட்டில் செய்யக்கூடிய சுத்திகரிப்பு மற்றும் கிருமிநாசினிகளுக்கான குறிப்புகளை பலர் வெளியிடுகின்றனர்.
ஆனால் இவை எப்போதும் பயனுள்ளதாக இருப்பதில்லை. உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைக்கும் சரியான அளவு இரசாயனங்கள் இருப்பதால், வீடுகளில் மேற்பரப்புகளுக்கு கடையில் வாங்கிய ப்ளீச் அடிப்படையிலான கிருமிநாசினிகள் மற்றும் ஆல்கஹால் சார்ந்த கை சேனிடைசர்களை பயன்படுத்துவது நல்லது.
எனினும், மேஜைகளின் மேற்பரப்புகள் மற்றும் சமையலறை ஸ்லாபுகள் போன்ற கடினமான மேற்பரப்புகளுக்கு நீங்கள் ப்ளீச் மற்றும் தண்ணீரை ஒன்றாக கலக்கி கிருமிநாசினிகளை (disinfectant) வீட்டிலேயே உருவாக்கலாம்:
இதற்கான செயல்முறை:
• முதல் வகை: 1:10 விகிதம் (வலுவானது - மார்க் வார்னர் சூத்திரம்) - ஒரு லிட்டர் தண்ணீருக்கு ½ கப் ப்ளீச் அல்லது ⅓ கப் ப்ளீச் பவுடரை கலக்கவும்.
• இரண்டாம் வகை: 1:48 விகிதம் (நீர்த்தது - நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு ஃபார்முலா மையங்களின் சூத்திரம்) - ஒரு லிட்டர் தண்ணீருக்கு ⅓ கப் ப்ளீச் அல்லது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 டீஸ்பூன் ப்ளீச்சை சேர்க்கவும்.
ப்ளீச் அரிக்கும் தன்மை கொண்டது. எனவே நீர்த்த சூத்திரத்திலும் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ப்ளீச் கரைசல்கள் கலந்தபின் விரைவாக சிதைந்துவிடும். ஒவ்வொரு நாளும் இந்த கலவையை புதிதாக உருவாக்கிக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் நீர்த்த கரைசல்கள் வேகமாக சிதைந்துவிடும். எனவே நீண்ட காலம் நீடிக்க வேண்டிய கரைசல்களுக்கு (சுமார் ஒரு வாரம் வரை), 1: 4 விகிதத்திற்கு மேல் கலக்க வேண்டாம்.
மாற்றாக, ஆல்கஹால் சார்ந்த கிருமிநாசினியை இந்த பொருட்களுடன் நீங்கள் செய்யலாம்:
• 1½ (95%) (எத்தனால் பயன்படுத்தினால் நல்லது, ஆல்கஹாலும் பயன்படுத்தலாம்)
• 1 லிட்டர் வடிகட்டிய நீர்
• ½ டீஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்சைடு
• 30-45 சொட்டு எசன்ஷியல் ஆயில், அதாவது ஏதாவது ஒரு எண்ணேய் (விரும்பினால்)
வழிமுறைகள்:
ஒரு தெளிப்பு பாட்டில் தண்ணீர் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடை கலக்கவும். இந்த கலவையில் எண்ணெயை சேர்க்கவும் (ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணெயைப் பயன்படுத்தலாம்). ஆல்கஹால் சேர்க்கவும். கலவையை கலக்க நன்றாக குலுக்கவும்.
குறிப்பு: இந்த கலவையின் செயல்திறன் எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லை அல்லது அறிவியல் சான்றுகளால் ஆதரிக்கப்படவில்லை. இருப்பினும், பல கிருமிநாசினிகளுக்கு எத்தனால் அடிப்படையாக் இருப்பதால் இதை உபயோகித்து செய்யபடும் கிருமி நாசினிகள் பயனுள்ளவையாக இருக்கும்.
பொதுவாகவே, வீட்டை துடைக்கும் வேளையில், நீரில் கல் உப்பு, சிறிதளவு மஞ்சள் தூள், வேப்பிலை (Neem) சாறு அல்லது பொடி ஆகியவை போட்டு துடைப்பது நல்லது. இவை அனைத்தும் கிருமி நாசினிகளாக இருப்பதால், இவை வீட்டின் சுகாதாரத்தை மேம்படுத்த உதவும்.
ALSO READ: 90 நிமிடங்களில் COVID result: புதிய பரிசோதனை செயல்முறையை அறிமுகப்படுத்தியது Tata Group!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR