மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி கேண்டீன்களிலும் மாணவர்களின் உடல் நலத்தை கெடுக்கும் பீட்சா, நூடுல்ஸ் போன்றவற்றை விற்பனை செய்ய மாநில அரசு திடீர் தடை விதித்தது.
அதற்கு மாற்றாக கிச்சடி, சாதம், இட்லி, வடை உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது.
அதிக உப்பு, இனிப்பு, கொழுப்பு கொண்ட உணவுப்பொருட்களை பள்ளிகளில் விற்பனை செய்யக்கூடாது என்று மாநிலஅரசு நேற்று முன்தினம் அறிவிக்கை வெளியிட்டது. அதன்படி சிப்ஸ், நூடுல்ஸ், குளிர்பானங்கள், பீட்சா, பர்கர், கேக், பிஸ்கட், பன், ரசகுல்லா, குலாப் ஜாமுன், பேடா, காலாகண்ட், பானி-பூரி, சாக்லேட்ஸ், ஜாம், ஜெல்லி உள்ளிட்ட 12 வகையான உணவுப்பொருட்களை பள்ளி கேண்டீன்களில் மாணவ, மாணவிகளுக்கு விற்பனை செய்யக்கூடாது.
இந்த அறிக்கையையடுத்து, பள்ளி கேண்டீன்களில் ‘ஜங்க்புட்ஸ்’ விற்பனைக்கு தடைவிதித்து மஹாராஷ்டிரா அரசு உத்தரவிட்டது.